கர்த்தர் மேல் விசுவாசம் வைக்க வேண்டும்

ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் குறுக்காக கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்த கயிற்றின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் ஒருவர் நடந்து வருவார் என அறிவிக்கப்படுகிறது.
கர்த்தர் மேல் விசுவாசம் வைக்க வேண்டும்

ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் குறுக்காக கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்த கயிற்றின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் ஒருவர் நடந்து வருவார் என அறிவிக்கப்படுகிறது. இதை,  ஏராளமான மக்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அறிவித்தது போல ஒருவர் அந்த கயிற்றின் மீது நடந்து நிலப்பரப்பை வந்தடைந்தபோது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு தந்தார்கள்.

பின்னர் அவர் அந்த மக்களைப் பார்த்து, "நான் இந்தமுறை என் தோளின்மீது ஒருவரை சுமந்துக்கொண்டு கயிற்றின்மீது நடந்து மறுமுனைக்கு போகப்போகிறேன், இது என்னால் முடியுமென நம்புகிறீர்களா?'' என்று கேட்டபோது, "ஆம், நம்புகிறோம், நம்புகிறோம் உங்களால் முடியும்'' என்று மக்கள் ஆர்ப்பரித்தார்கள். 

"அப்படியென்றால், யாராவது ஒருவர் வந்து என் தோளின் மீது ஏறுங்கள்'' என்றார். அவ்வளவுதான், அத்தனைபேரும் பயந்து ஓடிப்
போனார்கள். 

ஆனால், துணிச்சலாக ஒரே ஒரு சிறுமி மட்டும் அவருடன் செல்ல முன்வந்தாள். காரணம் அது அவருடைய மகள். அவள் நம்பியது போலவே அவரும் பத்திரமாக அந்த கயிற்றின் மீது நடந்து மறுமுனைக்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்தார். 

அதுபோலவே நமக்காக நம்முடைய பாடுகள் துக்கங்கள் அனைத்தையும் சுமக்க தயாராக தேவன் இருக்கிறார். நான் தேவனை விசுவாசிக்கிறேன். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை விசுவாசிக்கிறேன் என்று வாயினால் தினந்தோறும் அறிக்கையிட்டால் மட்டும் போதாது. இந்த சிறுமி எவ்வாறு தன்னுடைய தந்தை தன்னை பத்திரமாக அக்கரை சேர்ப்பார் என்று விசுவாசித்து தந்தையின் தோள் மேல் எவ்வாறு அந்தப் பெண் நம்பிக்கையுடன் அமர்ந்து சென்றாளோ-! அதைப் போன்று நாமும் தேவன் மேல் விசுவாசம் வைக்க வேண்டும்.  யாக்கோபு 2:26-இல் "கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது.'' மேலும், சங்கீதம் 55:22-இல் "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்'' என்றும் பார்க்கிறோம்.

ஆகவே, நம்முடைய பாடுகள் துக்கங்கள் அனைத்தையும் என்மேல் வைக்க வேண்டும். நாம் சுமக்க தேவையில்லை, நம்மையும் நம்முடை பாடுகளையும் சுமக்க இயேசு காத்திருக்கிறார்.  நம்மேல் மனம் உருகுகிற இயேசுவின் மேல் பாரத்தை வைப்போம். அவர் நம்மை இரட்சிப்பார். 
ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com