நீதிமான்களை காக்கும் தேவன் 

சோதோம் கொமோரா பட்டணத்தில் பாவம் பெருகியிருப்பதால் அந்தப் பட்டணத்தை  அழிக்க தம்முடைய தூதர்கள் மூன்றுபேரை அனுப்பினார்.
நீதிமான்களை காக்கும் தேவன் 

சோதோம் கொமோரா பட்டணத்தில் பாவம் பெருகியிருப்பதால் அந்தப் பட்டணத்தை  அழிக்க தம்முடைய தூதர்கள் மூன்றுபேரை அனுப்பினார். அவர்கள் ஆபிரகாம் தங்கியிருந்த கூடாரத்தின் வழியே வந்தனர். அப்பொழுது ஆபிரகாம் அவர்கள் மூவரையும் நன்றாக உபசரித்தார். ஆபிரகாமை தேவன் ஆசீர்வதித்தார்.  

ஆபிரகாம் தேவனுக்கு மிகவும் பிரியமான நீதிமானாக காணப்பட்டார். எனவே, தேவன்  சோதோம் கொமோரா பட்டணங்களை அழிக்கப்போகும் காரியத்தைக் குறித்து ஆபிரகாமோடு பேசினார். 

உடனே ஆபிரகாம் தேவனிடம் அந்த பட்டணத்திற்காக வேண்டினார். "துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? அந்த பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருந்தால் அவர்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?'' என்றார்.

கர்த்தர் உடனுக்குடன் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். "நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலம் முழுவதையும் இரட்சிப்பேன்'' என்று உடனே பதில் சொன்னார் (ஆதி. 18:26).

மீண்டும் ஆபிரகாம் "ஒருவேளை நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால்'' என்று கேட்டபோது, கர்த்தர், "அதை அழிப்பதில்லை'' என்றார். மீண்டும் ஆபிரகாம், "நாற்பது நீதிமான்கள் இருந்தால்'' என்று கேட்டதற்கு, கர்த்தர், "நாற்பது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை'' என்றார் (ஆதி. 18:28,29). ஆபிரகாம் முப்பது, இருபது, பத்து என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, கர்த்தர் பொறுமையா பதில் அளித்துக்கொண்டே இருந்தார். அவர் கடைசியாக "பத்து நீதிமான்கள் இருந்தால்கூட அந்த பட்டணத்தை அழிப்பதில்லை'' என்றே பதில் கூறினார். சோதோம் பட்டணத்தில் இருந்த ஆபிரகாமின் சகோதரன் லோத்துவின் குடும்பத்தை தேவன் காப்பாற்றினார். லோத்து தேவனுடைய பார்வைக்கு நீதிமானாக எண்ணப்பட்டார். எனவே அவனுடைய குடும்பத்தில் உள்ள அனைவரையும் அந்த பட்டணத்தைவிட்டு வெளியே அனுப்பி தப்பிக்க வைத்தார். துன்மார்க்கர் நிறைந்த அந்த சோதோம் கொமோரா பட்டணம் அழிந்தது.

நீதிமான்களைக் குறித்து இயேசு கூறும்போது, "நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்'' என்றார். (மத்தேயு 13:43) 
மேலும் 1 பேதுரு 3:12-இல் "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவன் நம்மைக் காண்கிறார், நம் செயல்கள் அனைத்தையும் அறிந்திருக்கிறார். அவருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பதை நாம் அறியும்போது, நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தேவனுக்குப் பிரியமானவைகளாகவே காணப்படும். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது நீதிமான்களாக காணப்படுவோம். எந்தவிதமான பிரச்னைகளோ போராட்டங்களோ நம் வாழ்வில் வந்தாலும் தேவன் நம்மை அவற்றினின்று விடுவித்துக் காப்பார். 
- ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com