சனிபகவான் திருக்கரத்தில் கிளி!

"தொண்டர்கள் நயினார் கோயில்' திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோயிலின் அருகில் அமைந்துள்ளது.

"தொண்டர்கள் நயினார் கோயில்' திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோயிலின் அருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், அகத்தியர் மற்றும் சிவனடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் இங்கு கோயில் கொண்டதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. சிவன் சந்நிதிக்கு முன்புறத்தில் திருஞானசம்பந்தர், அகத்தியர் இருவரும் அமைந்துள்ளனர். இங்குள்ள பிரகாரத்தில் சனிபகவான் தெற்குநோக்கி எழுந்தருளி வலக்கரத்தில் கிளியுடன் காணப்படுகிறார்.
சகாதேவன் உருவாக்கிய கோயில்!
கேரள மாநிலம், கோட்டயம் அருகில் திருக்கடித்தானம் என்ற இடத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இதனை பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் அமைத்து வழிபட்டதாகக் கூறுவர். இங்கு, கிருஷ்ணர் விக்ரகம் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சக்தியை பெற்றுக்கொண்டே வருவதாக கூறுகிறார்கள். கலியுகம் முடியும்போது இச்சிலை ஜோதியாக மாறி விண்ணில் கலந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
- கே. பிரபாவதி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com