நிகழ்வுகள்

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்கு முன் வடக்குத்தெருவில் விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு

மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக உத்ஸவம்
தஞ்சை மாவட்டம், மெலட்டூர் கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்கு முன் வடக்குத்தெருவில் விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் 77 ஆவது ஆண்டு பாகவத மேளா நாடக மகோத்சவம் நடைபெறுகின்றது. மே:18 - பிரகலாத சரித்திரம், மே:20 - அரிச்சந்திரா பகுதி 1, மே:21 - அரிச்சந்திரா  பகுதி-2, மே-23 - மார்க்கண்டேயன் ஜனனம், மே:25 - ருக்மிணி கல்யாணம், மே:26  - வள்ளித் திருமணம்.  
தொடர்புக்கு: 94431 27000.
நாள்: 17.5.2017 - 27.5.2017.
மஹாசம்ப்ரோக்ஷணம் 
திண்டுக்கல் மாநகர், எம்.வி.எம். நகர், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் மற்றும் தென்திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ தும்பிக்கையாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது. முன்னதாக ஹோமம் மற்றும் பூஜைகள் ஜூன்- 1,2,3, ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
நாள்: 4.6.2017, நேரம்: காலை 7.30 - 8.30 மணி.
பிரஹ்மோத்ஸவம்
சென்னை, சூளை, எண். 9, ராகவா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் 5 ஆம் ஆண்டு பிரஹ்மோத்ஸவம் பத்து நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறுகின்றது. முக்கிய நிகழ்வாக, மே 16- கருட சேவை, திருவீதி உலா; மே 18- திருக்கல்யாணம், மே 21- புஷ்ப பல்லக்கு, திருவீதி உலா நடைபெறும்.
நாள்: 12.5.2017 - 21.5.2017. 
மகா குருபூஜை
சென்னை, திருவான்மியூர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சமாதி நிலையத்தில் 88 ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா, 3 நாள்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. விழாவினையொட்டி, நித்திய பாராயணம், அர்ச்சனை ஆராதனையுடன் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக, மகா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. 
நாள்: 15.5.2017 - 17.5.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com