பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பவர்களை நான் விரும்புகிறேன்.  பகவான் 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பவர்களை நான் விரும்புகிறேன்.  பகவான் 
- ஸ்ரீ கிருஷ்ணர்

* "உண்மையில் நீ பரமாத்மா! அஞ்ஞானத்தின் காரணமாகத்தான் உனக்குப் பந்தமும் அதிலிருந்து பிறவிச்சுழலும் ஏற்பட்டிருக்கின்றன'. ஞானம் என்ற நெருப்பு அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்துவிடும்.  
- ஆதிசங்கரர்

* பழுத்துக் கனிந்த பழம் தரையில் விழுந்துதான் தீர வேண்டும். அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆக வேண்டும் இறப்பது நிச்சயம், இருப்பது நிச்சயமில்லை. 
- ஸ்ரீ ராமர்

* மழை பெய்து வெள்ளம் பெருகும்போது நதியில் நீர்ச்சுழல்கள் தோன்றுகின்றன. அது போலவே, தங்களிடம் பணம் அதிகமாகும்போது மூடர்கள் கர்வம், அகங்காரம் ஆகிய சுழல்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.  
- ஸ்ரீ ராமர்

* மக்களை மயக்கும் மகாமாயையின் மாய வலையிலிருந்து வெளியே வருவதுதான் எவ்வளவு கடினமாக இருக்கிறது. ஆதலால் நீ அழுதுகொண்டே, "கருணை மயமான ஜகன்மாதாவே நீ என் மீது கருணை வைத்து உன் தரிசனத்தை எனக்குக் கொடு. எனக்கு ஆன்மிகப் பாதையைத் திறக்கும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன். என்னிடம் தவமும் இல்லை, பக்தியும் இல்லை. நான் உன்னுடைய பலவீனமான குழந்தை. என்னை நீ காப்பாற்று, காப்பாற்று' என்று பிரார்த்தனை செய். 
- சுவாமி பிரேமானந்தர் 

* நீ இறைவனிடம் இடைவிடாமல், "ஓ.. இறைவனே, நான் ஒன்றுமில்லை என்பதையும், எல்லாம் நீயே என்பதையும் நான் தெரிந்துகொள்ள அருள் செய்யும்படி பிரார்த்தனை செய்கிறேன். நான் உன்னுடைய கையில் இருக்கும் ஒரு கருவி என்பதையும், அனைத்து செயல்களையும் செய்பவன் நீதான் என்பதையும் நான் உணர்ந்துகொள்வதற்கு உதவி செய்' என்று வேண்டி, ஒருவன் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதை ஒருவன் புரிந்துகொள்ளும்போது, அவன் உண்மையான மகிழ்ச்சியை அடைகிறான். ஏனென்றால் அவன், இறைவன் தன்னை எப்போதும் பாதுகாப்பதை உணர்கிறான். தன்னுடைய அனைத்து செயல்களையும் இறைவன்தான் வழி நடத்துகிறார் என்பதையும், அவர் தன்னை ஒருபோதும் தவறான வழியில் செலுத்தமாட்டார் என்பதையும் அவன்  தெரிந்துகொள்கிறான்.
- சுவாமி ராமகிருஷ்ணானந்தர்

* நீ இறைவன் திருநாமத்தைத் திரும்பத் திரும்ப ஜபம் செய்வதற்கும் அவரிடம் இடைவிடாமல் பிரார்த்தனை செய்வதற்கும் ஒருபோதும் மறந்துவிடாதே. 
- சுவாமி சிவானந்தர் 

* தாய் தந்தையருக்கும் ஆசிரியருக்கும் எது உகந்ததோ, அதையே மகன் செய்ய வேண்டும். இந்த மூவரும் மகிழ்ச்சியடைந்தால் போதும், மகன் வேறு தவம் எதுவும் இயற்ற வேண்டாம். 
- மனுதர்மம் 

* கெடுக்க வல்லதும், கெட்டவர் தங்களை எடுக்க வல்லதும், மனதை அடக்கத் துணையாவதும் மனமேயாம். மேகங்களை வருவிப்பதும் விரட்டி ஓட்டுவதும் வாயுவின் வேலை ஆவதைப்போல, மோட்சத்தை உண்டு பண்ணுவதும் பந்தத்தை உண்டு பண்ணுவதும் மனதின் வேலையாகும்.
- பிரபுலிங்கலீலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com