கேரோ தந்த தந்தக்கட்டில்!
By DIN | Published on : 03rd November 2017 11:45 AM | அ+அ அ- |
கிழக்கிந்திய கம்பெனியினர் பவானியை மாவட்டத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது வில்லியம் கேரோ என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்துவந்தார். அவர் ஆங்கிலேயராதலால் பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வேதநாயகியின் தோற்றத்தில் மனதைப் பறிகொடுத்த அவர் கோயிலின் கிழக்குப்பகுதியில் துளை செய்து வழிபாடு நேரத்தில் அம்மனை வணங்கி வந்தார். நாளடைவில் அம்மனின் அடியவரானார்.
ஒருநாள், இரவு மாளிகையில் கேரோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை அழகிய பெண்ணொருத்தி எழுப்பி கீழே அழைப்பதாக உணர்ந்து கீழே வந்ததும் கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்த அதிசயம் வேத நாயகியின் அருளால் நிகழ்ந்தது என எண்ணிய கேரோ தன் நினைவாக, "1804 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் அன்று' எனக்குறிப்பிட்டு தனது கையொப்பமிட்டு தந்தக் கட்டில் ஒன்றை அம்மனுக்கு வழங்கினார். அந்தக் கட் டில் அம்மன் பள்ளியறையில் இன்றும் உள்ளது.
- கோட்டைச் செல்வம்