அபய ப்ரதானம் என்றால் என்ன?

விபீஷணன் மிகவும் பயந்த நிலையில் ஸ்ரீ ராமரிடம் சரணடைகிறான். ஸ்ரீ ராமர் விபீஷணின் பயத்தைப் போக்கி, " அபய ப்ரதானம்' வழங்குகிறான். 

* ஒருவன் மிகவும் பயந்து போயிருக்கிறான். அவன் மற்றொருவனிடன் பூரணமாகச் சரணடைந்து, "என்னைக் காப்பாற்றுங்கள்!'' என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறான். அவனை ஒருவன், " நீ பயப்படாதே, உன்னுடைய துன்பத்திலிருந்து நான் உன்னை விடுவிக்கிறேன்'' என்று கூறுகிறான். அவ்விதம் கூறுபவன் தன்னிடம் சரணடைந்தவனுக்கு "அபய ப்ரதானம்' செய்கிறான்.

* விபீஷணன் மிகவும் பயந்த நிலையில் ஸ்ரீ ராமரிடம் சரணடைகிறான். ஸ்ரீ ராமர் விபீஷணின் பயத்தைப் போக்கி, " அபய ப்ரதானம்' வழங்குகிறான். 

* அதுபோல் மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் சரணடைகிறான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு,  "அபய ப்ரதானம்' வழங்குகிறான். 

* தமது கோயில்களில் தேவ - தேவியர்களுக்கு "அபய கரம், வரம் தரும் கரம்'  ஆகியவை இருக்கின்றன. இவற்றில் " அபய கரம்' தன்னை வழிபடும் பக்தர்களுக்கு "அபய ப்ரதானம்'  வழங்குவதைக் குறிக்கும். 

* "பயம்' என்றால் "அச்சம்', அச்சமற்ற நிலையை, தன்னிடம் சரணடைந்தவனுக்கு ஒருவன் வழங்குவது  "அபய ப்ரதானம்' எனப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com