கிருஷ்ண பகவானின் அம்ஸமாக அவதரித்த மஹான்!

"சாதுக்களை காப்பாற்றவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் உறுதி கொடுத்துள்ளார்.
கிருஷ்ண பகவானின் அம்ஸமாக அவதரித்த மஹான்!

"சாதுக்களை காப்பாற்றவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் உறுதி கொடுத்துள்ளார்.  அவ்வாறே ஆழ்வார்களை அவதரிக்கச் செய்தார். எம்பெருமான் ஆழ்வார்களின் பாடல்களை கேட்க மிகவும் விரும்புகிறார் என்பதால்தான் திருமாலின் திருக்கோயில்களில் ஆழ்வார்களின் பாசுரங்கள் ஓதப்படுகின்றன.

ஆழ்வார்களிலே நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிப் பரவியுள்ளனர்.  திருமங்கையாழ்வாரின் பாடல்களில் ஈடுபட்ட திருஇந்தளூர் பரிமளரங்கன் ஆழ்வாரை சோதிக்க காட்சி கொடுக்காமல் இருக்க, பெருமானை நிந்தனை செய்து ஒரு பதிகம் பாடினார் ஆழ்வார்.  அதையும் ரசித்த எம்பிரான் ஆழ்வாருக்கு காட்சி தந்ததாகக் கூறுவர்.  மேலும் ஆழ்வார் திருநின்றவூர் எம்பெருமானை பாடாமல் சென்றுவிட , பின்பு பிராட்டியின் விருப்பப்படி ஆழ்வாரை தொடர்ந்து சென்று கடல்மல்லையிலும் சோழநாட்டு திவ்ய தேசமான திருக்கண்ணமங்கைக்கும் சென்று பாடல் பெற்றதாகவும் வரலாறு உண்டு.  

திருக்கண்ணமங்கைப் பெருமானுக்கு மேலும் சில பாடல்களை கேட்க வேண்டும் என ஆழ்வாரிடம் தனது விருப்பத்தை வெளியிட,  திருமங்கை ஆழ்வாரோ தனக்கு இன்னும் பல திவ்யதேசங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் தற்போது அவகாசம் இல்லை என்றும் பிறிதொரு சமயம் கூறுவதாகவும் சொல்லிவிட்டார்.   

திருமங்கையாழ்வார் "கலியுகத்தில் நம்பிள்ளை என்னும் ஆசார்யராய் அவதரிக்க, கண்ணனே பெரிய வச்சான் பிள்ளை என்னும் ஆசார்யராக அவதரித்து நம்பிள்ளையிடம் உபதேசம் பெற்றார்' என்பதை வைணவ குருபரம்பரை வரலாறுகள் மூலம் அறியலாம். திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரமான கார்த்திகை நாளிலேயே நம்பிள்ளையும் அவதரித்தார்.  இதன் மூலம் திருமங்கை ஆழ்வார் திருமாலுக்கே ஆசாரியனாக பிறந்தார் என்பது வைணவ சம்பிரதாயம்.

இத்தகைய பெரியவாச்சான் பிள்ளையின் அவதாரத் தலம் கும்பகோணம், அணைக்கட்டு மார்க்கத்தில் திருவெள்ளியங்குடி திவ்யதேசத்திற்கு அருகாமையில் உள்ள சேங்கனுராகும்.  நாலாயிரதிவ்ய பிரபந்தங்களுக்கும் உரை எழுதி வைத்த பெருமை இவரையே சாரும்.  இவருடைய வியாக்யானங்கள் இல்லாது போனால் திவ்யபிரபந்தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை யாரும் அறிந்திருக்க முடியாது என்பது பெரிய ஜீயர் மணவாள மாமுனிகளின் திருவுள்ளம்.  

கிருஷ்ணாவதாரத்தில் கீதையை உபதேசித்த கண்ணனே பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்து "வியாக்கான சக்ரவர்த்தி' என்று புகழ் பெற்றார்.  இந்த அருளாளரின் அவதாரத் திருநன்னாள் செப்டம்பர்-12 ஆம் தேதி, (ஆவணி -ரோஹிணி) அமைகின்றது.  மறுநாள் ஸ்ரீ ஜெயந்தி (செப்டம்பர்-13) சேங்கனூர் திருத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

- எம். என். ஸ்ரீநிவாஸன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com