குருபகவான் தன்மைகள்

வர்ணம்- அந்தணர், திசை- வடகிழக்கு, தானியம்- கொண்டைக்கடலை, சமித்து - அரசு, தேவதை- இந்திராணி, பிரம்மா, ரத்தினம்- புஷ்பராகம்,
குருபகவான் தன்மைகள்

வர்ணம்- அந்தணர், திசை- வடகிழக்கு, தானியம்- கொண்டைக்கடலை, சமித்து - அரசு, தேவதை- இந்திராணி, பிரம்மா, ரத்தினம்- புஷ்பராகம், உலோகம்- தங்கம், பஞ்சபூதம்- ஆகாயம், மலர்- முல்லை, பால்- ஆண், மொழி- சமஸ்கிருதம் (வடமொழி) தெலுங்கு, நிறம்- மஞ்சள், எண்- 3, பார்வை- 5,7,9 ஆம் இடங்கள். 

காரகத்துவம்- தனம், புத்திரம், திருமணம், கிரகப் பிரவேசம், பெண்கள் ருது ஆவது; ஜீவனம்- ஆசிரியர், புரோகிதர், ஜோதிடர், மதகுருமார்கள், சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள், கருவூலம், வங்கி, காப்பீட்டுத் துறைகள். ஆட்சி வீடுகள்- தனுசு, மீனம், உச்ச வீடு- கடகம், நீச்ச வீடு- மகரம், உகந்த நட்சத்திரங்கள்- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. தசையின் காலம்- 16 ஆண்டுகள், சுவை- இனிப்பு, வாகனம்- யானை. நட்பு கிரகங்கள்- சூரியன், சந்திரன், செவ்வாய் பகவான்கள். பரிகார தலங்கள்- ஆலங்குடி, தென் குடித்திட்டை, திருச்செந்தூர், திருப்புலிவனம், திருவலிதாயம். 

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம்- சராசரியாக ஓராண்டு. பெற்றோர்- ஆங்கீரஸ முனிவர், சிரத்தா தேவி, கோத்திரம்- ஆங்கீரஸ கோத்திரம், மனைவி- தாரா, மகன்- கசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com