எளிய மனதோர் பேறு பெற்றோர்!

இறைமகனாய் அவதரித்த இயேசு, மனித இனம் எப்படி வாழ்ந்தால் பரலோகத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பிரசங்கத்தில் போதித்த
எளிய மனதோர் பேறு பெற்றோர்!

இறைமகனாய் அவதரித்த இயேசு, மனித இனம் எப்படி வாழ்ந்தால் பரலோகத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பிரசங்கத்தில் போதித்த  கருத்துக்களில் அதாவது, பாக்கியங்களில் முதலாவது, " எளிய மனதோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது'' - மத்தேயு 5:3.

ஏழையர் உள்ளம் அல்லது எளிய மனம் என்றால் என்ன? அதாவது "" பணம், பொருள் செல்வத்தின்மீது பற்று கொள்ளாது நற்குணத்தில் தனவந்தனாய் வாழ்வது. நல்ல பாசங்களில் ரத்த உறவுகள், திருமண உறவுகள், நட்பு, நல்லறிவு அல்லது வேலைகளில் உலக செல்வ சம்பந்தமானவை பற்றி ஓர் எளிமையில் இருப்பது. பணம் படைத்தவர்களைக் கண்டு பொறாமைப்படாமல் அவர்களுக்கு எல்லா தீமைகளும் நிகழ வேண்டுமென்று சாபமிடாமல் அவர்களை அழித்து ஒழித்திட மனத்தால்கூட  நினையாதிருப்பதும் தனக்குள்ளானதைக் கொண்டு நேர்மையாக வாழ்பவன் எளிய மனம் படைத்தவனாவான். அப்படிப்பட்டவன் கடவுளை பற்றிக் கொள்கிறான். விண்ணரசை உரிமையாக்கிக் கொள்கிறான்.

அதுபோல்,  "ஒரு தனவந்தன் தன் மனதில் தரித்திரமுடையவனாக ஏழையாக எளியவனாக வாழ்ந்து தனது செல்வத்தை அன்பாக மாற்றுகின்றவன்; பாலைவனத்தில் பயணிகளை காப்பாற்றுகின்ற சுனைநீர் போலாகின்றான். ஏனெனில் அவன் தாராளமாய் கொடுக்கின்றான். அவனிடம் பேராசை இல்லை. பிறர் நம்பிக்கையிழந்த சந்தர்ப்பங்களில் உதவியளிப்பதில் அவன் மகிழ்ச்சியடைகின்றான். ஏனென்றால் பொன், பொருளின் மீதுள்ள தாக்கத்திலிருந்து தான் விடுபட்டதில் மகிழ்ச்சியடைகின்றான். அதுதான் தனவந்தனுக்குரிய எளிய உள்ளம். அப்படிப்பட்டவனும் விண்ணரசை பரிசாகப் பெறுகிறான்''

இந்த விளக்கங்கள் நற்செய்தி நூலிலே இல்லை. எழுதப்படவில்லை, ஏனென்றால் இயேசு போதித்ததெல்லாம் எழுதினால் எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன் என தூய யோவான் பிரிவு 21: 25 இல் கூறப்பட்டுள்ளது. இக்கருத்து " மரியா வால்டோர்ட்டா என்ற பெண்ணுக்கு இயேசு கொடுத்த காட்சியில் கூறப்பட்டுள்ளது.

அளவுக்கு மீறி ஒரு பொருளின் மீது பற்றுள்ளவன் பாவம் செய்கிறான். பாவம் செய்பவன் விண்ணரசை கைப்பற்ற முடியாது. பெரும்பாலும் செல்வந்தர்கள் எளிய மனத்தோராய் வாழ்வது அரிது. 

அதனால்தான் இயேசு கூறினார், " செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்று: மத்தேயு 19: 23,24.

ஏழை எளிய கைவிடப்பட்டோர், நோயாளிகள், வீதியில் வீசி எறியப்பட்ட சிசுக்கள், முதியவர்களில் இறைவனைக் கண்டு, எளிய உள்ளம் கொண்டு யார் வாழ்ந்தாலும் விண்ணரசை தனதாக்கிக்கொள்வர் என்பது உறுதி.
- ஜி.ஐ. பிரான்சிஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com