மங்கலம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி!

தெற்கு மஹாராஷ்ட்ரா மாநிலம், கோலாப்பூரில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயத்தில் நவராத்திரியின் ஒன்பது நாளும் விழாக்கோலம்தான். பெரும்பாலும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழா இது! 
மங்கலம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி!

தெற்கு மஹாராஷ்ட்ரா மாநிலம், கோலாப்பூரில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயத்தில் நவராத்திரியின் ஒன்பது நாளும் விழாக்கோலம்தான். பெரும்பாலும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழா இது! 

பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வண்ண வண்ணப்பூக்களை வாரி வாரி மஹாலட்சுமிக்கு சார்த்தி ஒரு மலர்ச்சோலையையே உருவாக்கி விடுவார்கள். தேவிக்குச் சார்த்திய பூக்களை எடுத்து மற்றொரு பெண்ணுக்கு கொடுத்து பரிமாறிக் கொள்வதே இக்கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவின் சிறப்பம்சம்!

"கொல்காசுரன்' என்ற அசுரன், தினமும் ஒரு மனிதனையே உணவாக உட்கொள்வான். இதனால் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர்.  ஸ்ரீ மஹாலட்சுமி தேவியிடம் சென்று முறையிட்டனர். தேவியும் கொல்காசுரனை வதம் செய்தாள். பின்னர் அவனது மகன் கர்வீர் அசுரனையும் வதம் செய்தாள் மஹாலட்சுமி. கர்வீர் இறக்கும் தருவாயில் தேவியிடம் "என்றென்றும் தன்பெயரை உச்சரிக்கும்படியாக இந்த ஊர் அமைய வேண்டும்' என்று வேண்டி ஏராளமான மலர்களைச் சமர்ப்பித்துப்பின் உயிர் நீத்தான். அவன் கேட்டபடியே இவ்வூர் " கொல்ஹாபுரி' என்றும் "கர்வீர்புரி' என்றும் அழைக்கப்படுகிறது.

நவராத்திரி முடியும் பத்தாவது நாளில் "நல்லது வென்றது, தீமை அழிந்தது' என்ற தத்துவத்தை விளக்கும்படியாக "ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்'' என்று பாடியபடி பெண்கள் இக்கோயிலில் கும்மி, கோலாட்டம் என, ஆடிப்பாடியபடி ஸ்ரீ மஹாலட்சுமியின் மீதுள்ள மலர்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் தூவிக்கொண்டு, கைகளில் நிறைய வளையல்களை அணிந்து கொண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடுவர்.

- ராமசுப்பு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com