நவக்கிரகங்கள் நல்கும் நன்மைகள்! 

சூரியபகவானிடமிருந்து வரும் காந்த சக்தி அலைகள் நம் உடலில் உயிர் சக்தியையும் ஆத்ம பலத்தையும் சுறுசுறுப்பையும் உண்டாக்குகிறது. 

*சூரியபகவானிடமிருந்து வரும் காந்த சக்தி அலைகள் நம் உடலில் உயிர் சக்தியையும் ஆத்ம பலத்தையும் சுறுசுறுப்பையும் உண்டாக்குகிறது. 
*சந்திரபகவானிடமிருந்து வரும் காந்த சக்தி மின்அலைகள் நம் உடலில் அன்பையும் அமைதியையும் சாந்தத்தையும் இன்பத்தையும் குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.
*செவ்வாய்பகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் நம் உடலில் ரத்த அணுக்கள் விருத்தி அடையவும் ரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறவும் செய்வதோடு வீரம், வெற்றி அளிக்கக்கூடிய உணர்ச்சிகளையும் உண்டாக்குகிறது. 
*புதபகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் நமது மூளை நரம்புகளை இயக்கவும் மகத்தான புத்தி, சாதுர்யம், சாகசச் செயல்கள் புரியும் சக்திகளையும் உணர்ச்சிகளையும் உண்டாக்குகிறது. 
*குருபகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு மகத்தான அறிவு, ஞானம், பக்தி, பண்பு, நீதி, நேர்மை, சத்தியம், யோகம் முதலிய உன்னத உணர்ச்சிகளை உண்டாக்குகிறது. 
*சுக்கிரபகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் நமது விந்து அணுக்களை வளர்த்து, காதல் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, சந்தான விருத்திகளையும் உண்டாக்குகிறது. 
*சனிபகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் யாராவது நீதி, நேர்மை, சத்தியம், அன்பு, அகிம்சை, பண்பு, பக்திக்கு விரோதமான காரியங்களைச் செய்தாலும் அவர்களுக்கு பலவிதமான இடையூறுகளையும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் துன்பங்களையும் தீமைகளையும் உண்டாக்குகிறது. 
*ராகுபகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் நமது உடலில் உண்டாக்கும் விஷப்பொருள்களை வெளியேற்றி உடல் சிறப்பாக செயல்புரியச் செய்கிறது.
*கேதுபகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் உலக வாழ்வில் வெறுப்பையும் ஞானம், மோட்சம், தெய்வீகம், ஆன்மிகம் முதலிய தத்துவ சாஸ்திரங்களில் ஈடுபாட்டையும் உண்டாக்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com