சித்திரையில் சூரியபூஜை! 

விழுப்புரம் மாவட்டம், பனையபுரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது திருப்புறவார் பனங்காட்டீசன் திருக்கோயில்! 

விழுப்புரம் மாவட்டம், பனையபுரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது திருப்புறவார் பனங்காட்டீசன் திருக்கோயில்! இங்கு அருள்புரியும் இறைவனை சித்திரை முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை சூரியன் தன் ஒளிக்கதிர்களை காலையில் படரவிட்டு வழிபடும் அற்புதத்தைத் தரிசிக்கலாம். இதனை சூரியபூஜை என்று போற்றுவர். இத்திருக்காட்சியை தரிசித்தால் கண்ணொளி பிரகாசிக்கும் என்பது நம்பிக்கை! இத்திருக்கோயில் விழுப்புரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன.
 சித்திரா (சித்தர்) பௌர்ணமி!: சித்திரா பௌர்ணமி அன்று சில ஊர்களில் இரவில் பௌர்ணமி நிலவின் ஒளியில் பூமியிலிருந்து ஒருவகை பூமிநாதம் (உப்பு) பூரித்து வெளிக்கிளம்பும். இதனை ஆரம்ப காலத்தில் சித்தர்கள் கண்டு பிடித்தார்கள். இந்த உப்பு (மருந்து) சித்தமருந்துக்கு வீரியம் அளிக்கும் தன்மை கொண்டதாகும். இந்த உப்பு சேர்க்கப்பட்ட மருந்து மாறாத இளமையை தரும் சக்திகொண்டது. இந்த அரிய உப்பு இன்றும் சில இடங்களில் சித்திரா பௌர்ணமி அன்று பூமியிலிருந்து பூரித்து கிளம்புவதாகச் சொல்லப்படுகிறது. இதனை முதன்முதலில் சித்தர்கள் கண்டுபிடித்ததால் சித்திரா பௌர்ணமியை சித்த மருத்துவர்கள் "சித்தர் பௌர்ணமி' என்று போற்றுவர்.
 - டி. ஆர். பரிமளரங்கன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com