விசுவாசத்தில் வல்லமை!

நம்முடைய விசுவாசம் தெளிவானதாகவும், எந்த சந்தேகமும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அது தேவன் நல்லவர், வல்லவர் என்பதை விசுவாசிப்பது மட்டுமல்ல, அவர் சொன்னபடியே ஆகும்'
விசுவாசத்தில் வல்லமை!

நம்முடைய விசுவாசம் தெளிவானதாகவும், எந்த சந்தேகமும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அது தேவன் நல்லவர், வல்லவர் என்பதை விசுவாசிப்பது மட்டுமல்ல, அவர் சொன்னபடியே ஆகும்' (மாற்கு 11:23) என்பதில் முழு நம்பிக்கை வைப்பதாகும்.
விசுவாசத்தினால் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையக் கேட்கும் போது பதிலும் தெளிவாகவே இருக்கும். "நீங்கள் எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ' விசுவாசமும், ஜெபமும் ஒரு காரியத்துக்காக ஒன்றுபட்டு தேவனை நாடும்போது, அவற்றை கொடுப்பதற்கு தேவன் தம்மையே அர்ப்பணிக்கிறார்.
மாற்கு 11:4-இல் ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்' என கூறப்பட்டுள்ளது. நிறைவான விசுவாசம், நிறைவான ஜெப வேண்டுதல்களை தன்னுள் கொண்டிருக்கும். அது எவ்வளவு பெரிய, விவரிக்கமுடியாத செயல்பாட்டு பகுதியாக இருந்தலும் எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள்' என்பதை எவ்வளவு நிச்சயமான, உறுதியான வாக்குதத்தம்.
நம்முடைய தலையாய கரிசனை எல்லாம் நமது விசுவாசத்தைப்பற்றியதுதான். அதன் வளர்ச்சியைப்பற்றிய பிரச்னைகளும், அதன் ஆற்றல்மிகு முதிர்ச்சியடைவதற்கான செயல்களையும் பற்றியதுதான். சிதறாமல், சந்தேகம் அல்லது பயம் இல்லாமல், எதைக் கேட்கிறோமோ அதை விடாப்பிடியாக பிடித்துக்கொள்ளும் ஒரு விசுவாசம். நமக்கு அவ்விதமான விசுவாசம்தான் தேவை. நடைமுறைப்படுத்துவதிலும், செயல்பாட்டிலும், விசுவாசம் விலைமதிப்பற்ற முத்தைப்போன்றது.
விசுவாசம் மற்றும் ஜெபத்தைப்பற்றி நமது ஆண்டவர் கூறிய மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அதிக முக்கியத்தவம் வாய்ந்தவை.
விசுவாசம் தெளிவாக, குறிப்பான காரியத்துக்காக இருக்க வேண்டும். அது ஏதோ உறுதியற்ற, நிச்சயமற்ற, தெளிவற்ற மங்கலான காரியம் அல்ல. தேவன் நமக்காக செயலாற்ற முடியும் என்ற ஏதோ ஒருவிதமான நம்பிக்கையைவிட அது மேலானதாக இருக்கவேண்டும். நாம் கேட்பதை பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக இருக்கவேண்டும். மாற்கு 11.23-ஆம் வசனத்தில், தான் சொன்னபடி நடக்கும் என்று, தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன்சொன்னபடியே ஆகும்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
எவ்வளவு ஆழமான நமது விசுவாசமும், வேண்டுதலும் தெளிவானதாக இருக்கிறதோ, அவ்வண்ணமாகவே அதற்குக் கிடைக்கும் பதிலும் இருக்கும். நாம் ஜெபிக்காத ஒன்றை கிடைக்கப்பெறாமல், உண்மையாக எதை நாடி எதைக் குறிப்பிட்டு, எதற்காக ஜெபித்தோமோ அது கிடைக்கப் பெறுவோம்.
விசுவாசமும், ஜெபமும் வேண்டுதலுக்கான காரியத்தைத் தேர்வு செய்து, தேவன் என்ன நடப்பிக்க வேண்டுமென தீர்மானம் செய்கின்றது. அவன் சொன்னபடியே ஆகும்.
"விசுவாசம் மற்றும் ஜெபத்தின் எல்லா கோரிக்கைகளையும் நிச்சயமாக முழுமையாக நிறைவேற்ற கிறிஸ்து ஆயத்தமாக இருக்கிறார். தேவனிடம் சமர்ப்பிக்கும் கோரிக்கைகள் தெளிவானதாக, உறுதியானதாக, நிச்சயமானதாக இருப்பின், அவை சமர்ப்பிக்கப்பட்ட மாதிரியே தேவன் அதை நிறைவேற்றுவார்.
- ஒய். டேவிட் ராஜா

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com