பொன்மொழிகள்!

இறைவனையே நினைத்து வாழும் பக்தனுக்கு என்றும் ஆனந்தம் உண்டு. இறைவனையே நினைத்து வாழாத பக்தனுக்கு என்றும் துயரம்தான். மனிதனுடைய குற்றங்கள்தான் அவன் வேதனைகளுக்குக் காரணம்.
பொன்மொழிகள்!

இறைவனையே நினைத்து வாழும் பக்தனுக்கு என்றும் ஆனந்தம் உண்டு. இறைவனையே நினைத்து வாழாத பக்தனுக்கு என்றும் துயரம்தான். மனிதனுடைய குற்றங்கள்தான் அவன் வேதனைகளுக்குக் காரணம். "இறைவனுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் நாம்' என்று உண்மையான ஒரு பக்தன் உறுதியாக நம்புகிறான்.

- ஸ்ரீ ராமானுஜர்

உறக்கத்தைக் கெடுப்பது, ஆன்மிகக் கருத்துக்கள் சொல்வதைத் தடுப்பது, கணவன்  மனைவியைப் பிரிப்பது, தாய்  சேயைப் பிரிப்பது ஆகியவை பிரம்மஹத்திற்குச் சமமான பெரிய பாவங்களாகும்.

- தேவி பாகவதம்


எவன் எந்த வித்யையை நன்கு கற்றிருக்கிறானோ, அதுதான் அவனுக்கு மேலான தெய்வம். அதைத்தான் அவன் பூஜித்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதுதான் அவனுக்கு உதவி செய்யும்.

- விஷ்ணுபர்வம்

அகண்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் பேதத்தையும் உண்டு பண்ணி, புத்திமான்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் பேதத் தன்மைகளைக் கொள்ளும்படியாக மாயை மயக்குகிறது. ஆகையால் நிகழாததை நிகழச் செய்வதில் வல்லது மாயை.

-  மாயா பஞ்சகம்

சேராததை முடித்து வைப்பது எதுவோ, அதுதான் மாயை. எது இன்னதென்று சொல்ல முடியாதோ அதுதான் மாயை. 

- வடமொழி சுலோகம்

"சம்சார மாயை' என்ற தூக்கத்திலிருந்து விழிப்பது எளிதன்று. அதற்கு, "மாயைலிருந்து விடுபட வேண்டும்'என்ற தீவிர விருப்பம் உள்ளத்தில் பொங்க வேண்டும். அன்றியும் கத்திமுனைமேல் நடப்பது போன்று இடைவிடாத ஜாக்கிரதையுடன் புலன்களையும், மனதையும் மாசற நிறுத்தி வேற்றுமை உணர்ச்சியை அறவே நீக்க வேண்டும்.

- உபநிஷதம்

செப்பிடு வித்தைக்காரனுடைய ஜாலங்கள் அவனை மயக்காது, பிறரை மயக்கும். அதுபோல, யோக மாயையானது பகவானை மயக்காது, பிறரையே மயக்கும்.

- ஆதிசங்கரர்

குருடன்  வழியில் இருக்கும் வைக்கோல் துரும்பை மிதித்தாலும் பயம் கொள்கிறான். அதுபோன்று மாயையால் கட்டுண்டவர்கள், ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கண்டு பயமடைகிறார்கள்.

ஞானதரிசிவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com