பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

நன்மையை விட்டுவிட்டுத் தீமையை மட்டும் கைக்கொள்வது தீயவர்களின் குணமாகும். 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• நன்மையை விட்டுவிட்டுத் தீமையை மட்டும் கைக்கொள்வது தீயவர்களின் குணமாகும். 

• பக்தனின் இதயத்தில் இறைவனைப் பற்றிய ஞானம் தானாகவே பதியும். பந்தப்பட்ட மனிதனின் இதயத்தில் ஈசுவர ஞானம் பதிவதில்லை.

• இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவல் தீவிரமாக உனக்கு இருக்கவேண்டும்.

• தூய பக்தர்களின் உள்ளத்தில் இறைவன் தோன்றுகிறான், ஆதலால் தூய்மையானவனாக இரு.

• இறைவனின் திருவருள் பெற்ற மனிதன், அற்பமான உலக விஷயங்களில் ஆசைப்படுவதில்லை.

• நீ யாருக்காக உழைக்கிறாயோ, அந்த இறைவனே உனக்கு வேண்டியவைகளை அளிப்பான்.

• நீ உலகத்தில் வாழ்ந்து வா. ஆனால் உலகப்பற்றுள்ளவனாக இருக்காதே.

• உன் மனம் சதாசர்வகாலமும் இறைவனிடம் நிலைபெற்று இருக்க வேண்டும்.

• உலக விஷயங்களை நாடிச் செல்வதால் மனம் சிதறி விரையமடைகிறது. 

• இறைவன் நாமத்தைச் சொல்பவர்கள் பரிசுத்தர்கள்.

• ஆன்மிக முன்னேற்றத்திற்கு அவசியமானவைகளில் சத்சங்கமும் ஒன்றாகும்.

• ஒருவன் பெரியோர்களின் நடவடிக்கைகளை பின்பற்றித் தன்னுடைய ஒழுக்கத்தைச் சீர்திருத்திக் கொள்ள முயற்சி செய்வது எப்போதும் நல்லது.

• ஒருவன் உயர்வடைய விரும்பினால் அடக்கம் உடையவனாக இருக்க வேண்டும்.

• உயர்ந்த குணமுள்ள மனிதன் எப்போதும் பணிவுடன் இருக்கிறான்.

• இறைவனுடன் ஐக்கியமாகி சாந்தமாக இருக்கும் மனதில்தான் இறைவனின் திவ்ய தரிசனம் தோன்றும். 
- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com