கிறிஸ்து பாலகனை வரவேற்கலாம் வாங்க!

கிறிஸ்துமஸ் உலகமெல்லாம் கொண்டாடப்படும் பண்டிகை. கிறிஸ்து என்னும் பாலகன் பிறக்கும் நிகழ்வுக்கு முன் மாதத்தை வருகையின் காலம் என்று
கிறிஸ்து பாலகனை வரவேற்கலாம் வாங்க!

கிறிஸ்துமஸ் உலகமெல்லாம் கொண்டாடப்படும் பண்டிகை. கிறிஸ்து என்னும் பாலகன் பிறக்கும் நிகழ்வுக்கு முன் மாதத்தை வருகையின் காலம் என்று டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி பண்டிகையின் மகிழ்ச்சி ஆரம்பிக்கப்படுகிறது. வீடுகள் அலங்கரிக்கப்படும். வண்ண வண்ண ஒளி விளக்குகள் ஒளி வீசி அழகு கூட்டும். நட்சத்திரங்கள் எல்லார் வீடுகளிலும் ஏற்றப்படும். கிறித்துவர்கள் வீடுகள் மட்டும் அல்ல, எல்லா வீடுகளிலும் நட்சத்திரங்கள் உயரக் கட்டி வண்ண வண்ண ஒளி வீசும்.
வேதாகமத்தில் இயேசு உவமையாக சொன்ன நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு யூத மணவாளனை மணமகள் வீட்டார் வரவேற்கும் நிகழ்வு.
பத்து கன்னிகைகள் தீவட்டிகளுடன் ஆடல் பாடல் இசையுடன் உறவினர்கள் சூழ, ஊரின் முகப்பில் காத்திருந்து மணமகனை வரவேற்பர்.
ஐந்து தோழியர் அதில் முன்எச்சரிக்கையுடன் தங்கள் தீவட்டிகளுக்கு எண்ணெய் கொண்டு வந்தனர். மற்ற ஐந்து கன்னிகள் எண்ணெய் கொண்டு வரவில்லை. மணமகன் வர தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. எனவே, வரவேற்க வந்த கன்னியர் ஓய்வு எடுத்தனர்.
இரவு வேளை - எல்லாரும் உறங்கிவிட்டனர். "நடுராத்திரியிலே இதோ... மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு போக புறப்படுங்கள்' என்ற சத்தம் உண்டாயிற்று (மத்தேயு: 25: 6)
அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தபடுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள், தீவட்டி எரிய எண்ணெய் இல்லாமையால் புத்தியுள்ளவர்களை நோக்கி "உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே' என்றார்கள். புத்தியுள்ளவர்கள், "எங்களுக்கு வேண்டிய எண்ணெய் மட்டும் உள்ளது. எனவே, நீங்கள் விற்கிறவிடத்தில் போய் வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்கள். அவர்கள் வாங்க போனபோது மணவாளன் வந்துவிட்டார். புத்தியுள்ள ஐந்து கன்னியர்கள் எரியும் தீவட்டிகளுடன் மணவாளனை வரவேற்றனர்; திருமண வீட்டிற்குச் சென்றனர். வாயில் கதவு மூடப்பட்டது.
மற்ற ஐந்து கன்னிகைகள் எண்ணெய் விற்பவரிடம் ஓடி எண்ணெய் வாங்கி தங்கள் தீவட்டிகளுக்கு ஊற்றி எரிய வைத்து மணமகனை வரவேற்க வந்தனர். திருமண வீட்டின் கதவைத் தட்டினர். திறக்கப்படவில்லை. "நாங்கள் மணமகனை வரவேற்க வந்த ஐந்து கன்னியர்' என்றனர். " நீங்கள் யார் என்று தெரியவில்லை' என்ற பதில் வந்தது. ஐந்து பேரும் ஏமாந்தனர்.
நாமும் பாலகன் இயேசுவை வரவேற்க காத்திருக்கிறோம். அலங்கரிக்கப்பட்ட வீடும், சிறப்புமிக்க விலை உயர்ந்த ஆடையும் நல்ல வகை வகையான இனிப்பு ருசிமிக்க உணவு இவை மட்டுமே சிறந்த வரவேற்பு ஆகாது. இருதயத்தில் பாலகன் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உடைகளையும் உணவும் உதவியும் பரிசும் இனிப்பும் வழங்கி பரிசுத்த வாழ்க்கை, தெய்வ பக்தி, இனிய சொல் நல்ல சன்மார்க்கமாக வாழ்ந்து, இயேசு பாலகனை வரவேற்போம்.
பாலகன் இயேசுவின் அருள் ஆசீர்வாதம் நமக்கு உரியதாகும்.
- தே. பால் பிரேம்குமார்






 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com