மன அமைதி தரும் மகேஸ்வரன்!

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தென்பகுதியில் தென்காசி செல்லும் பாதையில் உள்ளது மடவார் விளாகம். இங்குள்ளது சுமார் 1500 வருடங்கள் பழைமையான அருள்மிகு மனோன்மணியம்மை
மன அமைதி தரும் மகேஸ்வரன்!

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தென்பகுதியில் தென்காசி செல்லும் பாதையில் உள்ளது மடவார் விளாகம். இங்குள்ளது சுமார் 1500 வருடங்கள் பழைமையான அருள்மிகு மனோன்மணியம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில்.
வில்லிபுத்தூர் எல்லையில் உள்ள புனல்வேலி எனும் சிற்றூரில் சிவனடியார் ஒருவரின் மனைவிக்கு பேறுகால கட்டத்தில் யாரும் துணைக்கு இல்லாதத் தருணத்தில் வைத்தியநாதப் பெருமானே அவளுக்குத் தாயாராக நின்று பிரவசம் பார்த்து அருளினார் என்பர் (அருகில் உள்ள நதிக்கும் கர்ப்ப நதி என்று பெயர்). மற்றொரு வரலாற்றின்படி, வில்லூர் எனும் வனப்பகுதியில் வேடர்கள் பலர் இருந்தனர். அவர்களது தலைவன் தெக்கன். நற்குணம் படைத்தவன். வினை வசத்தால் பார்வை இழந்து பரிதவித்தான். மலைத்தேன் வாங்க மலைக்கு வந்த சிவனடியார் மூலம் வைத்தியநாதரின் பெருமையை அறிந்தான். ஒரு சிவராத்திரியன்று இரவு முழுவதும் உறங்காது வைத்திய நாதர் சந்நிதியே கதியென்று கிடந்தான். மூன்றாம் ஜாமத்தில் நந்தி தேவரே அவனை பிரம்பால் அடித்து , "ஈசனை கண்ணால் தரிசித்திடும்' என்று கூறியதுபோல் உணர்ந்த தோடு, பார்வையும் பெற்றான்.
திருமலை நாயக்கரின் வயிற்றுவலியை நீக்கி அருள்புரிந்த சிவகாமியம்மை, பத்தடி உயரம் கொண்ட ஒரே கல்லினாலான ஆடவல்லானின் திரு உருவச்சிலை, ஜூரஹரதேவர், காலபைரவர், தல விருட்சமான வன்னிமரத்தடியில் உள்ள சனி பகவான், சிவகங்கைப் பிள்ளையார், கன்னிப் பிள்ளையார், தண்டாயுதபாணி போன்றவை இவ்வாலயத்தின் பெருமைக்குரிய சந்நிதிகள்.
இறைவன் சந்நிதி கொடிமர மண்டபத்தில் உயரே வைத்திய நாத சுவாமி நிகழ்த்திய 24 திருவிளையாடல்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன. அதைப் போல் அம்பாள் சந்நிதியில் உயரே நவக்கிரக சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது விசேஷமாகும். மகாமண்டபத்தில் கங்காளநாதர், அம்பலவாணர் அரங்கம் ஆகியவை காண்பதற்கு அறியவை. சிவகங்கைத் தீர்த்தம் இறைவனாலே உண்டாக்கப்பட்டது. நோய் தீர்க்கும் தன்மையுடையது.
பிரதி திங்கட்கிழமைகளில் அதிகார நந்தி ஜபம், மரணபயம் நீங்கவும் ஆயுள் அபிவிருத்திக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நடத்தப்படுகின்றது. மனோன்மணி அம்மைக்கு பிரதி வெள்ளிக்கிழமைகளில் கன்னிப்பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் மனதுக்குப் பிடித்த மாப்பிள்ளை அமைவார் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.
எதிர்வரும் சிவராத்திரியன்று (பிப்ரவரி -13) பிரதோஷ பூஜையும் தொடர்ந்து இரவு நான்கு கால அபிஷேகங்களும் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 04563 - 261262.
- எஸ்.ஆர்.எஸ். ரெங்கராஜன்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com