மரித்த சிறுமியை உயிருடன் எழுப்பிய இயேசு! 

தாயும் தந்தையும் தம் பிள்ளைகளிடம் மிகவும் பாசமாகவும் அன்புள்ளவராகவும் இருப்பர். வேதாகமத்தில் (மாற்கு 5:22-43) மிக பாசமுள்ள ஒரு தகப்பனின் நிகழ்ச்சி உண்டு.
மரித்த சிறுமியை உயிருடன் எழுப்பிய இயேசு! 

தாயும் தந்தையும் தம் பிள்ளைகளிடம் மிகவும் பாசமாகவும் அன்புள்ளவராகவும் இருப்பர். வேதாகமத்தில் (மாற்கு 5:22-43) மிக பாசமுள்ள ஒரு தகப்பனின் நிகழ்ச்சி உண்டு.
யவீரு என்பார் மிக பக்தியுள்ள மதிப்புக்குரிய ஜெப ஆலய தலைவன் தன்அன்பு மகள் மேல் மிகவும் பாசம் வைத்திருந்தார். அவளுக்கு பன்னிரண்டு வயது. அவரின் மகள் திடீர் என்று நோய்வாய் பட்டாள். யவீரு தம் மகளுக்கு வைத்தியம் செய்தார். நோய் மிகவும் கடுமையாக இருந்தது. மிகவும் உருக்கமாக கடவுளை வேண்டினார். தெய்வம் ஒன்றுதான் தம் அன்பு மகளை காப்பாற்ற முடியும் என்று நம்பினார்.
இயேசு பற்றி அறிந்த அவர், காலமே புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார். இயேசுவை கண்டவுடன் அவர் பாதத்தில் விழுந்து, "என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள் அவள் ஆரோக்கியமடையும் படிக்கு நீர் வந்து அவள்மேல் உமது கைகளை வையும் அப்பொழுது பிழைப்பாள்'' என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
இயேசு அவருக்கு மனமிரங்கி குணமாக்க யவீரு வீட்டிற்குப் புறப்பட்டார்.
ஜெப ஆலயத் தலைவரிடத்தில் சிலர் வந்து உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள். இனி, ஏன் போதகரை வருத்தபடுத்துகிறீர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே ஜெப ஆலயத் தலைவனை நோக்கி, "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு'' என்று சொல்லி தம் சீடர்கள் மூன்று பேரை மட்டும் அழைத்துக்கொண்டு யவீருவுடன் வந்தார். வீட்டுக்கு வந்து சந்தடியையுடன் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, " நீங்கள் சந்தடி பண்ணி அழுகிறதென்ன , பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையிலிருக்கிறாள்'' என்றார். பிள்ளையின் தாயும் தகப்பனையும் தம் சீடர் மூவரையும் பிள்ளை கிடத்தி வைத்திருந்த இடத்தில் பிரவேசித்து, "தலீத்தாகூமி'' என்று கூறி பிள்ளையின் கையை பிடித்தார்.
"தலீத்தாகூமி' என்றால் " சிறு பெண்ணே, எழுந்திரு'' என்று அர்த்தமாகும்., உடனே சிறு பெண் எழுந்து நடந்தாள். அவளுக்கு உண்ண உணவு கொடுக்கும்படி இயேசு கூறினார். இதைப்பார்த்த யாவரும் ஆச்சரியப்பட்டார்கள். புலம்பி அழுகிறவர்கள் தங்கள் அழுகையை நிறுத்தி ஆச்சரியப் பட்டார்கள்.
யவீருவின் துக்கம் சந்தோஷமாக மாறியது. அவரின் வேண்டுதல் இயேசுவால் கேட்கப் பட்டு அற்புதம் நிகழ்ந்தது. இயேசுவின் அன்பு தாய் தகப்பனின் அன்பை விட மிகவும் மேலானது. இயேசுவை நோக்கி என்ன விண்ணப்பம் செய்தாலும் கேட்டு உதவி செய்வார். நம் குழந்தைகளின் நலனில் நாம் எப்படி அக்கறை காட்டுகின்றோமோ அப்படியே அவரின் பிள்ளைகளாகிய நம் மீது அவர் அன்பும் அக்கறையும் கொண்டவர் இயேசு.
- தே. பால் பிரேம்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com