சோதனைக்காரனை வென்ற இயேசு!

எல்லாருக்கும் சோதனை உண்டு. வெற்றி பெறுவோர், ஆசீர்வதிக்கப்படுவர். தோல்வி அடைபவர் துன்பத்துக்கு உட்படுவர். 
சோதனைக்காரனை வென்ற இயேசு!

எல்லாருக்கும் சோதனை உண்டு. வெற்றி பெறுவோர், ஆசீர்வதிக்கப்படுவர். தோல்வி அடைபவர் துன்பத்துக்கு உட்படுவர்.
 வேதாகமத்தில் இயேசு ஆண்டவர் தன் ஊழியத்தை முப்பதாவது வயதில் ஆரம்பிக்குமுன் சோதனை வந்தது. "அப்போது, இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள்கள் உபவாசமிருந்தபின்பு அவருக்கு பசி உண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரனால் "இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்' என்றான்.
 அதற்கு இயேசு "மனுஷன் அப்பதினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலே பிழைப்பான்' என்றார்.
 அப்பொழுது பிசாசு தேவாலயத்து உப்பரிகை உச்சி மேல் அவரை நிறுத்தி கீழே குதியும் தேவதூதர்கள் உம்மை கீழே விழாதபடி தங்கள் கைகளில் ஏந்திக் கொள்வார்கள் என்றான். இயேசு அதற்கு பதிலாக "உன் கடவுளை பரீட்சை பாராதிருப்பாயாக என்று எழுதியுள்ளதே' என்றார்.
 மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய் உலகத்தின் ராஜியங்களை எல்லாம் காண்பித்து, என்னைப் பணிந்துக் கொள் அப்போது, இந்த ராஜ்ஜியங்களையும் அதன் மகிமைகளை எல்லாம் உனக்கு தருவேன் என்று பிசாசு கூறினான், அப்போது இயேசு "அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரையே பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக' என்றார்.
 அப்பொழுது சோதனைகார பிசாசு ஓடிப் போனான். உடனே தேவதூதர்கள் வந்த இயேசுவுக்கு பணிவிடை செய்தார்கள் (மத்தேயு 4:1-11)
 நாற்பது நாள்கள் உபவாசத்தோடு தம் உலக ஊழியத்தையும் ஊழிய முடிவில் சிலுவையில் தம் பாவமில்லா ரத்தத்தை தந்து, உலக மனிதரின் பாவத்தை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்று, மனிதரிடம் அன்பும் பரிவும் அருளும் கடவுளின் பிள்ளைகள் ஆகும் மாபெரும் ஆசீர்வாதத்தை தம் மக்களுக்கு சோதனையில் வெற்றி பெற்று தந்தார். இயேசு உலக மக்களை தம் மக்களாக பெற்றுக்கொண்டார்.
 சேதனை என்பது நமது குணநலம் அறிதல் தீமை செய்ய தூண்டுதல் , கடவுளின் அருள் பெற ஒரு பரீட்சை. நாம் சோதனையில் வெற்றி பெற்று நம் நற்குணங்களை காண்பிப்போம். பரீட்சையில் வென்று பெற்று இறைவனின் கருணை ஆசீர்வாதம் பெறுவோம்.
 - தே. பால் பிரேம்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com