நிகழ்வுகள்

கும்பகோணம் வட்டம், திருச்சேறை அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூச தேர் திருவிழா ஜனவரி -23 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. 

தைப்பூச தேர் திருவிழா
 கும்பகோணம் வட்டம், திருச்சேறை அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூச தேர் திருவிழா ஜனவரி -23 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. முக்கியமான நாள்கள் ஜனவரி -26 கருடவாகன சப்ரம், ஜனவரி - 28 திருக்கல்யாணம், ஜனவரி - 29 பஞ்சலட்சுமிகளுடன் புறப்பாடு, ஜனவரி- 31 திருத்தேர், தீர்த்தவாரி.
 ஸ்ரீ ராஜமாதங்கி நவராத்திரி
 திருப்போரூர்- செங்கற்பட்டு சாலையில் செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒளஷத லலிதாம்பிகை ஆலயத்தில் ஸ்ரீசக்ர ராஜசபை தர்பாரின் மந்திரிணீ தேவிக்கு 6 ஆம் ஆண்டு ராஜமாதங்கி நவராத்திரி விழா ஜனவரி -16 இல்தொடங்கி சிறப்பு அபிஷேகம், பூஜைகள், சகஸ்ரநாம அர்ச்சனைகள், இன்னிசைக் கச்சேரிகளுடன் நடந்து வருகின்றது. நிறைவு நாளான ஜனவரி -26 ஆம் தேதி மாணவ, மாணவியர்கள் தங்கள் கரங்களினால் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரிக்கு தேன் கலந்த பாலாபிஷேகம் செய்யும் வைபவம் நடைபெறும்.
 தொடர்புக்கு: 97899 21151 / 94453 59228.
 ஸ்ரீ ராதா கல்யாண மகோத்ஸவம்
 திருச்சி மாவட்டம், கீழவாளாடி அக்ரஹாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் 26.1.2018 - 28.1.2018 வரை நடைபெறுகின்றது. 28.1.2018 - ராதா கல்யாண உற்சவம், உபயநாச்சியார்- ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் வீதி உலா நடைபெறும். ஆஞ்சநேயர் உற்ஸவமும் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98426 13975/ 98946 70723.
தடாக பிரதிஷ்டை
 திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, கீழப்பாவூர் ஸ்ரீ அலர்மேல்மங்கா பத்மாவதி ஸமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி மற்றும் ஸ்ரீ நரசிம்ஹ பெருமாள் திருக்கோயிலில் கங்கா நர்மதா ஸம்யுக்த ஸ்ரீ நரசிம்ஹ புஷ்கரணிக்கு தடாக பிரதிஷ்டை நடைபெறுகின்றது.
 நாள்: 19.1.2018.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com