குருவை போற்றும் குருபூர்ணிமா!

ஆடி மாத பௌர்ணமி, தெய்வ வழிபாட்டிற்குரிய நாள் மட்டுமல்ல. நமக்கு கல்வியை போதித்து நல்வழிகாட்டிய குருவை வழிபடும் புனிதநாள். மேலும், ஆடி மாத பௌர்ணமியை குருபூர்ணிமா என்றும் போற்றுவர்.
குருவை போற்றும் குருபூர்ணிமா!

ஆடி மாத பௌர்ணமி, தெய்வ வழிபாட்டிற்குரிய நாள் மட்டுமல்ல. நமக்கு கல்வியை போதித்து நல்வழிகாட்டிய குருவை வழிபடும் புனிதநாள். மேலும், ஆடி மாத பௌர்ணமியை குருபூர்ணிமா என்றும் போற்றுவர்.
 மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பிதாவுக்கு அடுத்தபடியாக குரு போற்றப்படுகிறார். குரு (ஆசிரியர்) நமக்கு கல்வி அறிவினைப் புகட்டி சிறந்த அளிவாளியாக எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் வலிமையை அளித்தவர்.
 இந்த நால்வரும் நம் வாழ்வில் முதலிடம் பெற்றாலும் மூன்றாவது இடத்தில் உள்ள குருவானவருக்கு என்று ஒரு நாளினை சாஸ்திரம் ஒதுக்கியிருக்கிறது. அந்த நாள், "ஆடிமாத பௌர்ணமி ஆகும். இந்த நன்னாளை குருபூர்ணிமா என்று போற்றுவர்.
 அன்னை தந்தை, ஆசிரியர் (குரு) ஆகிய மூவரும் மூன்று உலகம், மூன்று ஆசிரமம், மூன்று வேதம், மூன்று தீ என்கிறது சாஸ்திரம். அன்னை பக்தியால் இப்பிறவியில் இன்பம்; ஆசிரியர் (குரு) பக்தியில் வீடு (மோட்சம்) பேறு ஆகியவற்றை பெறலாம்.
 குருபூர்ணிமா அன்று வழிபாடுகளின் மூலமாக நம் குரு வணக்கத்தை வியாச பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நமக்கு அறிவுக் கண் திறந்து, கல்வி போதித்த ஆசிரியர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று, பரிசுப் பொருள்கள் அளித்து தாழ்பணிந்து ஆசி பெறுவது நல்ல பலன்களைத் தரும்.
 பத்து குருமார்கள் இருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. சாஸ்திரங்களின் பொருளை விளக்கமாக புரியும்படி போதிப்பவர் "போத குரு!'. மாணவர்களுக்கு (சீடர்களுக்கு) தத்துவார்த்தங்களை விளங்க, விரிவாக உபதேசிப்பவர் " வேத குரு!' சீடர்களுக்கு வசியம் முதலிய வித்தைகளைப் போதிப்பவர் "நிஷத்த குரு!' சீடர்களுக்கு இம்மை, மறுமை இன்பத்தை விளைவிப்பவர் "காமிய குரு!' சீடர்களுக்கு நித்தியம், அநித்தியம் என்னும் விவேகத்தை போதிப்பவர் "சூசக குரு!' "
 மாணவர்களுக்கு "விஷயானுபவம் வித்யை' என்று கூறி ஆன்மாவில் விருப்பமூட்டுபவர் "வாசக குரு!' மாணவர்களுக்கு ஜீவப் பிரம்ம ஐக்கியத்தை ஞானோபதேசம் செய்பவர் "காரணகுரு!' ம"ôணவர்களுக்கு அவர்தம் ஐயத்தை நீக்குவது வாயிலாக நித்தியமாயுள்ள மோட்சத்தை அடைய அருள்செய்பவர் " விகித குரு!' மந்திர தந்திரக் கலைகளை ஆராய்ந்து அவற்றுள் கூறப்பட்டுள்ள கிரியைகளை கடைப்பிடித்து அவற்றால் வரும் நல்லவைகளை மட்டும் மாணவனுக்கு உபதேசிப்பவர் "கிரியா குரு!' மந்திர தந்திரக் கலைகளை விட்டு மகாவாக்கியத்தை உபதேசக் கலையை ஆராய்ந்து அதில் உள்ள ஞானானந்தத்தை தானும் பெற்று சீடனுக்கு அருள்பவர் "ஞானகுரு!'
 ஒரு மாணவனை (சீடனை) சாஸ்திர விற்பன்னராக ஆக்குவதும் நல்வழியில் செல்ல வழிவகுத்து கொடுப்பவரும் சத்குருவின் இலக்கணம் ஆகும். இதனையெல்லாம் அந்த காலத்தில் குருவின் ஆசிரமத்தில் தங்கி, குருவிற்கும் குருபத்தினிக்கும் பணிவிடைகள் செய்து, வேதங்கள் கற்று சிறந்த நிபுணத்துவம் பெற்றார்கள்.
 இன்றைய நவீன விஞ்ஞான உலகில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வகுத்துக் கொடுத்த கல்வி முறையை கற்பித்து, நல்வழிபடுத்தி சிறந்தவர்களாக உருவாக்கும் ஆசிரியர்களை குருவாகப் பாவித்து குருபூர்ணிமா நாளில் வணங்கலாம். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் அருகில் உள்ள கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆதி குருவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பேறுகள் பெறலாம்.
 - டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com