வேண்டிய வரம் அருளும் வேம்புயம்மன்!

சென்னை, குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அருகில் பொன்னியம்மன் ஆலயத்தின் பின்புறமாக சுமார் 100 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு வேம்புலியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 
வேண்டிய வரம் அருளும் வேம்புயம்மன்!

சென்னை, குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அருகில் பொன்னியம்மன் ஆலயத்தின் பின்புறமாக சுமார் 100 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு வேம்புலியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு, குரோம்பேட்டையை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரின் கனவில் தோன்றிய அன்னை வேம்புலியம்மன், "நான் உனது தோட்டத்து கிணற்றில் சிலை வடிவமாக கிடக்கிறேன். என்னை எடுத்து ஓரிரவுக்குள் பிரதிஷ்டை செய்து விடு. அப்படி பிரதிஷ்டை செய்யும் முன்பு, அரைக்கின்ற பொருள்களின் சத்தம் கேட்கக் கூடாது' என்று சொல்லி மறைந்தாள். 

உடனே, தன் தோட்டத்து கிணற்றுக்குச் சென்று ஆராய்ந்தார் ஏகாம்பரம். கனவில் அம்மன் சொன்னது போலவே கிணற்று நீரில் இருந்த அம்மனை எடுத்து அம்மன் சொன்ன இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். அதுவே இப்போது ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள இடம். தற்போது அவரது பரம்பரையினர் ஆலயத்தை நிர்வகித்து வருகின்றனர்.

பரிகார தெய்வமாக விளங்கும் வேம்புலி அம்மன் சோட்டானிக்கரை பகவதி அம்மனின் அம்சமாகவும் விளங்குகிறாள். தேவகோட்டத்தில் வைஷ்ணவி, பிராமி, மகேஸ்வரி, துர்க்கை ஆகியோர் அமைந்து அருள்பாலிக்கின்றனர். பால்முனீஸ்வரருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. 

வேம்புலி அம்மனை வழிபட்டு வருவதால் திருமணத்தடை விலகும். வியாபாரம் அபிவிருத்தியாகும். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். கிடைக்காத பொருள் கிடைத்து பேரின்பம் பெறும் நிலை உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள். சித்ரா பௌர்ணமி, ஆடி உற்சவ விழா (தீமிதி விழா) இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது.

அன்னையின் அருள்வாக்கின்படி (பிரசன்னம்) இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று கடந்த மே 20 - ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டலாபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com