வெளிநாடுகளில் சிவ வழிபாடு!

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவ வழிபாடு மேற்கொள்ளப் பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பழைய காலத்திலேயே சிவலிங்கத்தினை வழிபட்டு பேறுகள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் சிவ வழிபாடு!

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவ வழிபாடு மேற்கொள்ளப் பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பழைய காலத்திலேயே சிவலிங்கத்தினை வழிபட்டு பேறுகள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வட அமெரிக்காவில் "கொலராடோ' என்னும் இடத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள சிவன் கோயிலில் பெரிய சிவலிங்கம் ஒன்றினை 1937 -ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஜாவா தீவில் உள்ள கோயில்களில் இன்றும் திருவாசகம் ஓதுகிறார்கள். அங்குள்ள "பெரம்பாணம்' என்ற இடத்தில் உள்ள சிவாலயத்தில் சிவதாண்டவத்தின் 32
முத்திரைகளை குறிக்கும் சிற்பங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அங்குள்ள "டெகால்' என்ற ஆற்றிலிருந்து சிவபெருமானின் செப்புச்சிலை ஒன்றும்
கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 
சுமத்திரா தீவிலும் பழைய சிவன் கோயில் ஒன்றினை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டு பிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள். அத்திருக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவன் காட்சி தருகிறார். அத்துடன் அங்கு நந்தீஸ்வரர், விநாயகர் விக்கிரகங்களும் உள்ளன என்கின்றனர். 
"போர்னியா' என்ற இடத்தில் மலைக்குகையில் சிவன் சிலை மற்றும் விநாயகர் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சியாம் நாட்டிலும் பழைமையான சிவன் கோயில் உள்ளது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் சிவ வழிபாடு மேன்மையாகப் போற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com