வளம் நல்கும் வசந்த நவராத்திரி!

நவராத்திரி என்று சொன்னவுடனேயே நமக்கு புரட்டாசி மாதம் தான் நினைவிற்கு வரும். ஆயின் ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையிலிருந்து தசமி வரை உள்ள பத்து நாள்களும் நவராத்திரியாகவே
வளம் நல்கும் வசந்த நவராத்திரி!

நவராத்திரி என்று சொன்னவுடனேயே நமக்கு புரட்டாசி மாதம் தான் நினைவிற்கு வரும். ஆயின் ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையிலிருந்து தசமி வரை உள்ள பத்து நாள்களும் நவராத்திரியாகவே கருதப்பெறுகிறது. ஆயினும் நான்கு நவராத்திரிகள் முக்கிய நவராத்திரிகள் ஆகும். புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரி (சரத்காலம்) சாரதா நவராத்திரி! மாசி மாதத்தில் கொண்டாடப் பெறுவது சியாமளா நவராத்திரி! ஆடி மாதத்தில் கொண்டாடப்பெறுவது ஆஷாட நவராத்திரி! வசந்த காலத்தில் கொண்டாடப் பெறுவது வசந்த நவராத்திரி! வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால் வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன.
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப் பெறும் நவராத்திரியின் போது அம்பிகையை மூன்று அம்சங்களாகக் கருதி மூன்று, நாள்கள் வழிபடுகின்றோம். கல்வியை நல்கும் அன்னை சரஸ்வதி தேவிக்கு மூன்று நாள்களும் செல்வத்தினை வழங்கும் அம்பிகைக்கு அதாவது ஸ்ரீ மஹாலட்சுமிக்கு மூன்று நாள்களும் தொடர்ந்து ஆற்றலையும், நம்பிக்கையும் வழங்கும் துர்க்கைக்கு மூன்று நாள்களும் ஆக ஒன்பது நாள்களும் நவராத்திரி கொண்டாடப் பெறும். ஆடி மாதப் பிரதமை தொடங்கும் ஆஷாட நவராத்திரியில் வாராஹி அம்பிகையை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். மாசி மாத பிரதமையிலிருந்து தொடங்கும் சியாமளா நவராத்திரியில் "ராஜ மாதங்கி' என்னும் சியாமளாவை முன்னிறுத்தி 
வழிபாடு செய்வார்கள்.
வசந்த நவராத்திரிக்குத் தான் "லலிதா நவராத்திரி' என்னும் சிறப்பு உண்டு. ஒரே பராசக்திதான்..! ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்வதற்காக ஐந்து அம்சங்களாகப் பிரிந்து அருளாட்சி செய்கின்றாள். படைக்கும் சக்தி ப்ரம்மரூபிணியான சரஸ்வதியாகவும் காக்கும் சக்தி விஷ்ணு ரூபிணியான லக்ஷ்மியாகவும் அழிக்கும் சக்தி ருத்ர ரூபிணியான துர்க்கையாகவும் மறைக்கும் சக்தி ஈஸ்வரனின் ரூபிணியான ஈஸ்வரியாகவும் அருளும் சக்தி சதா சிவனின் ரூபிணியான பராசக்தியுமாக அருள்பாலிக்கின்றார்கள் என ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் தெரிவிக்கின்றது.
லலிதா நவராத்திரி என்னும் வசந்த நவராத்திரி திருநாளில் ஜகத்குரு ஸ்ரீ பதரி சங்கராச்சார்ய ஸ்ரீ úக்ஷத்ர சகடபுரத்தில் அம்பிகை ஸ்ரீ வித்யா ராஜ ராஜேஸ்வரிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. அம்பிகை அபிராமியாக உள்ளதால் அவளது சகோதரரான 
ஸ்ரீ மஹா விஷ்ணு அபிராமராக இக்காலத்தில் அவதாரம் செய்கின்றார். அம்பிகை வேறு மஹாவிஷ்ணு வேறு இல்லை. இருவரும் ஒருவரே! - என்பது அப்பர் பெருமானின் திருவையாற்றுத் தேவாரம். 
வசந்த நவராத்திரி சுப சமயத்தில் தான் ஸ்ரீ ராமர் திரு அவதாரம் செய்த ஸ்ரீ ராமநவமி வருகின்றது. எனவே இப்புனித நாள்களில் அம்பிகை வழிபாட்டுடன் ஸ்ரீ ராமரின் ஜனன உத்சவ வழிபாடுகளும் ஸ்ரீராமாயண பாராயணமும் தசமி திருநாளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும் தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவமும் நடைபெறும்.
ஏகாதசியன்று (27.3.2018) ஸ்ரீ க்ஷேத்ர சகடபுரத்திலிருந்து ஸ்ரீராம புஷ்ப ரதோத்ஸவம் புறப்பட்டு, அருகிலுள்ள முனியூர் வரை சென்று திரும்பும். அதே போன்று சென்னை கிழக்குத் தாம்பரம் அகஸ்தியர் தெருவிலுள்ள கிளை மடமான ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயிலிலும்; வசந்த நவராத்திரி உற்சவமும் ஸ்ரீ ராமநவமி உற்சவமும் தினசரி ஸ்ரீ மத் ராமாயண பாராயணமும் பட்டாபிஷேக வைபவங்களும் ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவமும் சிறப்புற நடைபெறும்.
இந்த ஆண்டு யுகாதித் திருநாள் (18.3.2018) முதலே வசந்த நவராத்திரி தொடங்கி, 
( 27.3.2018) வரை 10 நாள்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com