தேவனிடத்தில் விசுவாசமாயிருப்போம்! 

ஒருவருடைய எதிர்பார்ப்புகள் நிச்சயம் நடக்குமென்ற உறுதி கிடைக்க வேண்டுமென்றால், அதை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால்,
தேவனிடத்தில் விசுவாசமாயிருப்போம்! 

ஒருவருடைய எதிர்பார்ப்புகள் நிச்சயம் நடக்குமென்ற உறுதி கிடைக்க வேண்டுமென்றால், அதை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், "எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்ற உறுதி' என்பதற்கு கிரேக்க மொழியில் ஆழமான அர்த்தம் இருக்கிறது. இது ஒருவருக்குள் உண்டாகிற வெறும் உணர்ச்சியோ ஆசையோ கிடையாது. ஆகவே, விசுவாசம் என்பது அத்தாட்சியின் அடிப்படையில் உறுதியான நம்பிக்கை வைப்பதைக் குறிக்கிறது.
 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது என்று எபிரேயர் 10:1-இல் வாசிக்கிறோம். இந்த விசுவாசம் தேவன் பேரில் நமக்கு இருக்கும்போது அனைத்து காரியங்களும் நன்மையாகவே நடக்கும்.
 பரிசுத்த வேதாகமத்தில் மத்தேயு 8:5-13 -இல் ஒரு சம்பவத்தை பார்க்கலாம்:
 இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து, ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான். மற்றொருவனை வாவென்றால் வருகிறான். என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறேன் என்றான்.
 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
 இங்கு இயேசு திமிர்வாத நோயை குணமாக்குவார் என்ற விசுவாசம் நூற்றுக்கு அதிபதிக்கு இருந்ததால் வேலைக்காரனின் நோய் குணமானது. எபிரேயர் 11:6-இல், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன், அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.
 எனவே தேவனிடத்தில் விசுவாசமாயிருப்போம் நன்மைகûளை சுதந்தரிப்போம்.
 - ஒய். டேவிட் ராஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com