ஸ்ரீவில்புத்தூர் வைத்யநாதருக்கு திருக்கல்யாணம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது
ஸ்ரீவில்புத்தூர் வைத்யநாதருக்கு திருக்கல்யாணம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது. இத்தலத்து இறைவனை பிரம்மா, சூரியன், சந்திரன், துருவாசர், அகஸ்தியர், பாரத்வாஜர் ஆகியோர் வந்து வணங்கியுள்ளனர். படிக்காசு வைத்தல் காசுவாசி வாங்கல், மிளகைப் பயிறாக்கியது, வலையனுக்குக் கண் கொடுத்தது, தேவமித்திரனுக்கு வெண்குட்டம் தீர்த்தது போன்ற சிவபிரானின் 64 திருவிளையாடல்களில் 24 திருவிளையாடல்கள் நிகழ்ந்தது இத்தலமாகும்.
 மன்னர் திருமலைநாயக்கரின் வயிற்றுவலி தீர்த்தது முதல் வைத்தியநாத சுவாமி என வழங்கப்படுகிறார். நடுவழியில் ஏழைப் பெண்ணுக்கும் பிரசவம் பார்த்தவர். வேண்டியோருக்கு வேண்டியதை வழங்கும் வைத்தியநாதர் ஆகும்
 சிவகங்கை தீர்த்தம் போன்ற புகழ்மிக்க தீர்த்தங்களைக் கொண்ட இத்தலத்தில் ஜோதிலிங்க வடிவாய் அருள்மிகு சிவகாமி அம்பாளுடன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு 25-05-2018 முதல் 28-05-2018 முடிய வைகாசிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது.
 முக்கியமாக, 25-05-2018 அன்று இரவு திருக்கல்யாணமும்; 27-05-2018 திருத்தேர் புறப்பாடும்; 28-05-2018 அன்று காலை விசாக தீர்த்தவாரியும் நடைபெறும்.
 திருக்கல்யாணத்தில் பிரார்த்தனை செய்து கொள்வோருக்கும் திருத்தேர் வடம் பிடிப்பதன் மூலம் எவ்வித தோஷமும் நீங்கும் எனப்படுவதாலும் தீர்த்தவாரி சகல நலன் தரும் என்பதாலும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்
 தொடர்புக்கு: 0456 3261262 / 99946 80255.
 -இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com