பெண்களின் வாழ்க்கையில் குருபகவான்!

குருபகவான் பெண்களின் ஜாதகத்தில் பலம் பெற்று இருப்பதைக் கொண்டும் அவர் பார்வை நல்ல இடங்களுக்கு அமைவதைக் கொண்டும் (குறிப்பாக, மாங்கல்ய ஸ்தானத்திற்கு குருபகவானின் பார்வை, சேர்க்கை சிறப்பு) அவர்
பெண்களின் வாழ்க்கையில் குருபகவான்!

குருபகவான் பெண்களின் ஜாதகத்தில் பலம் பெற்று இருப்பதைக் கொண்டும் அவர் பார்வை நல்ல இடங்களுக்கு அமைவதைக் கொண்டும் (குறிப்பாக, மாங்கல்ய ஸ்தானத்திற்கு குருபகவானின் பார்வை, சேர்க்கை சிறப்பு) அவர் பெறும் பாக்கியங்களைக் கூறமுடிகிறது. 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று, ஆதிபத்யச் சிறப்பு பெற்று பலம் உயர்ந்திருக்கும் நிலைமையில் போது, அவருக்கு அனைத்துச் சிறப்புகளும் தேடாமலேயே கிடைத்துவிடும். அவர் மாதர் குல மாணிக்கமாகத் திகழ்வார். இதை வடமொழியில் "ஸ்த்ரீனாம் குருபலம் ஸ்ரேஷ்டம்' என்று கூறப்படுகிறது. தன காரகர், புத்திர காரகர், பர்த்துரு காரகர் என்று அழைக்கப்படும் குருபகவான், பெண்களுக்கு பணம், குழந்தை, கணவர் ஆகிய மூன்றையும் நல்லபடியாக வழங்குவார்.

எல்லையற்ற பரம்பொருளின் பிரதிநிதித்துவம் பெற்ற குருபகவானின் பார்வை பெற்றால்தானே இந்த உலகம் தழைத்து, செழித்து, கொழித்து வளம் பெற முடியும். தனது அருள்பார்வையை பெண் ஜாதகத்தில் 5,7,9 -ஆம் இடங்களில் பதித்து நல்ல கணவன் மூலம் நல்ல குழந்தைகளைக் கொடுத்து உலகம் போற்றும் உத்தமிகளை உண்டாக்குகிறார். குருபலத்தினால் திருமாங்கல்யத்தையும் சகல ஐஸ்வர்யங்களையும் தந்து, கௌரவம் அளித்து தெய்வநிலையை உண்டாக்குகிறார். 

தர்மசிந்தனையை வாரி வழங்கி உன்னதத் தாயாக்குகிறார். உயர் பதவியை உண்டாக்கி உற்றார் உறவினர்களின் பாராட்டுகளைத் தேடித் தருவார். யோக காரகரான குருபகவானால் தீர்க்காயுளும், சகல ஐஸ்வர்யங்களும், உயர்ந்த அந்தஸ்துமுள்ள கணவரை அடைகிறார். சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்து செல்வ சீமாட்டியாகப் பலர் போற்றும் பண்பின் சிகரமாகத் திகழ்கிறார். இல்லத்து அரசியாக்கி, இல்லத்தின் தலைவியாக்கி அந்த வீட்டுக்குரிய அனைத்து தகுதிகளையும் ஏற்படுத்தித் தருவார்.  இனிய இல்லறத்தை ஏற்படுத்தி, தானும் வாழ்ந்து, தான் பெற்ற மக்களையும் வளர்த்து மக்களுக்கு நன்மை செய்கிறார். இத்தகைய அருளை வழங்கும் பொன்னவன் என்ற குருபகவானை பெண்கள் அனைவரும் போற்றி வணங்கி எல்லா வளங்களையும் பெற்று பெண் இனத்திற்கே பெருமை சேர்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com