பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

"பிரசாதமும் கடவுளும் வேறல்ல' என்ற உறுதியான நம்பிக்கையை, நீ உன் மனதில் எப்போதும் பதிய வைத்துக்கொள். 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* "பிரசாதமும் கடவுளும் வேறல்ல' என்ற உறுதியான நம்பிக்கையை, நீ உன் மனதில் எப்போதும் பதிய வைத்துக்கொள். 

* அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஜபம் செய்தால், எப்படி மனதில் நிம்மதியில்லாமல் போகும்? 

* எப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களை நினைவில் வைத்திருந்தால், மனம் தானாக அமைதியடையும்.

* ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்போது ஒரு பக்தனைப் பிடித்துவிட்டாரோ, அதன்பிறகு அவனுக்கு வீழ்ச்சியே இல்லை.

* தினமும் பத்தாயிரம் முறை அல்லது, இருபதாயிரம் முறை ஜபம் செய்ய வேண்டும்.

* கடவுள் நமக்கு விரல்களைக் கொடுத்திருப்பதற்குக் காரணம், மந்திர ஜபம் செய்யும் பேற்றை அவையும் பெற வேண்டும் என்பதுதான். 

* பிரசாதமாக இருந்தால் ஐந்து வேளை சாப்பிட்டாலும் தவறில்லை; பிரசாதத்தைச் சாதாரண சாதத்துடன் ஒப்பிடக் கூடாது.

* எவ்வளவு துன்பம் இருந்தாலும், இறைவன் நாமத்தை ஜபம் செய்வது பயத்தை விலக்கிவிடும்.

* பொறுமை மிகவும் உயர்ந்த குணம். அதைவிட மேலான குணம் எதுவும் இல்லை.

* இறைவனைச் சரணடையுங்கள். "என்னைப் பாதுகாப்பதற்கு இறைவன் ஒருவர் இருக்கிறார்' என்ற எண்ணம் மனதில் இருந்தால் போதும். * ஒரு சாதாரணப் பொருள் வீணாவதையும் நாம் அனுமதிக்கக் கூடாது.

* கடவுள் தரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது திருவுளம் போலவே எல்லாம் நடக்கும். 

* "இறைவன் எனக்குச் சொந்தமானவர்' என்ற உண்மையான நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும்.

* மற்றவர்களுக்குத் தானம் செய்யும்போது, அந்த தானத்தின் பலனையும் அதனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். 
- அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com