ஓட்டுநர் இல்லாத டாக்ஸி: வடிவமைக்கிறது கூகுள் - Dinamani - Tamil Daily News

ஓட்டுநர் இல்லாத டாக்ஸி: வடிவமைக்கிறது கூகுள்

First Published : 27 August 2013 01:28 AM IST

ஓட்டுநரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் "ரோபோ-டாக்ஸி'யை தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.

2010-ஆம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம், டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.

இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள், கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால், தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.

இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும், கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.