இந்தியப் பொருளாதாரம் 2017-இல் 7.6% வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. சபையில் தகவல்

இந்தியாவில் முதலீடுகள் மீண்டும் அதிகரித்து வருவதாலும் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக
இந்தியப் பொருளாதாரம் 2017-இல் 7.6% வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. சபையில் தகவல்

இந்தியாவில் முதலீடுகள் மீண்டும் அதிகரித்து வருவதாலும் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக உற்பத்தித் துறை வலுவடைந்து வருவதாலும் நிகழ் நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் (2017-18) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் ஐ.நா. சபை கணித்துள்ளது.
ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா. சபையின் ஆணையத்தின் சார்பில், அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் முதலீடுகள் மீண்டும் அதிகரித்து வருவதாலும் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் உற்பத்தித் துறை வலுவடைந்து வருவதாலும் அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக உயரும்.
நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிலையான முதலீடுகளில் முரண்பாடு காணப்பட்டதால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிதமாக இருந்தது. தற்போதைய நிலையில், மீண்டும் உயர் வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழைக் காலத்தில் மழை சரியான அளவில் பெய்ததால், இந்தியாவில் வேளாண் துறை மீண்டும் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளதால், நுகர்பொருள் வளர்ச்சி விரிவடையும்.
ஜிஎஸ்டி மசோதா, திவால் மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டதன் ஒரு பகுதியாக, சிறந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கும் கட்டமைப்புச் செலவினங்களுக்கும் அண்மை காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், தனியார் முதலீட்டுடன் கூடிய வளர்ச்சி விரைவில் அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில வளர்ந்த நாடுகள் தங்களுடைய வளர்ச்சி விகிதத்தை இழந்து வரும் தற்போதைய சூழலில், இந்தியாவும் சீனாவும் முன்னணி நாடுகளாக விளங்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலையான, உயர் வளர்ச்சி விகிதமானது, தடுமாறிக் கொண்டிருக்கும் சர்வதேசப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெற உந்துசக்தியாக விளங்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com