"டைட்டானிக்' மாதிரி கப்பல் வடிவமைப்பில் சீன நிறுவனம் தீவிரம்!

டைட்டானிக் கப்பலின் முழு அளவு மாதிரி கப்பலை வடிவமைக்கும் பணியில் சீனாவைச் சேர்ந்த வூஷுவான் குழுமம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நடைபெற்று வரும் 'டைட்டானிக்' கட்டுமானப் பணிகள்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நடைபெற்று வரும் 'டைட்டானிக்' கட்டுமானப் பணிகள்.

டைட்டானிக் கப்பலின் முழு அளவு மாதிரி கப்பலை வடிவமைக்கும் பணியில் சீனாவைச் சேர்ந்த வூஷுவான் குழுமம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அந்த குழுமத்தின் அதிகாரி தெரிவித்ததாவது:
நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் 300-மீட்டர் நீளம் கொண்ட டைட்டானிக் போன்ற முழு அளவு மாதிரி கப்பலை கட்டமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 2018-ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது.
புதிய டைட்டானிக் கப்பல் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் சிச்சுவான் மாகாணத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
அசல் டைட்டானிக் கப்பலில் காணப்பட்டது போலவே உணவு அருந்தும் அறை, திரையரங்கு, சொகுசு அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட உள்ளன என்றார் அவர்.
சிச்சுவான் மாகாணத்தில் சுமார் ரூ.1,000 கோடி செலவில் புதிய டைட்டானிக் உருவாக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவர் முழு அளவிலான டைட்டானிக் மாதிரி வடிவை உருவாக்குவதாக 2012-இல் அறிவித்தார். ஆனால் அந்தத் திட்டத்தை அவர் கைவிட்டார்.
அசல் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 1912-ஆம் ஆண்டு பயணித்த போது எதிர்பாராத விதமாக பனிப் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் என்ற புகழுடன் அது தன் முதல் பயணத்தை மேற்கொண்டது. ஆனால், முதல் பயணத்திலேயே அது விபத்துக்கு உள்ளாகி மூழ்கியது.
இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் டைட்டானிக் திரைப்படம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவானது. நவீன சீனாவில் வெளியான முதல் வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பெருமையை டைட்டானிக் பெற்றது. இந்த திரைப்படத்துக்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com