சிரியாவில் போர் நிறுத்தம்: மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தல்

சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்கள்.
சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்கள்.

சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியை மீட்க ரஷிய போர் விமானங்களின் துணையுடன் சிரியா ராணுவம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, கணிசமான பகுதிகளை ராணுவம் மீட்டுள்ளது. பழைய நகரம் முழுவதும் தற்போது அரசு வசம் உள்ளது. மீட்கப்பட்ட பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி ஏற்கெனவே அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப் பகுதிக்குச் செல்கின்றனர். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேலும் சுமார் 2 லட்சம் பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மருந்து, உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இன்றி அவர்கள் அவதியுறுவதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின் தீவிரம் கடுமையாகியுள்ளது.
இந்த நிலையில், 5 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனக் கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். சிரியா அரசு இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனிடையே, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அலெப்போ நகரில் முற்றிலுமாகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. வாஷிங்டனில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது: நமது கண் முன்னே மானிடப் பேரழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் உள்பட 2 லட்சம் பொதுமக்கள் மருந்து, உணவு இல்லாமல் தவிக்கும் நிலை எழும் என அஞ்சப்படுகிறது. சிரியா அரசிடம் ரஷியாவுக்கும் ஈரானுக்கும் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்கச் செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா-அமெரிக்கா இடையேயான பேச்சில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷியா தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com