இந்தியப் பயணத்தை ரத்து செய்தார் பாக். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த இந்தியப் பயணத்தை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
இந்தியப் பயணத்தை ரத்து செய்தார் பாக். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த இந்தியப் பயணத்தை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி ரத்து செய்தார்.
இதுகுறித்து அந்நாட்டு வானொலியில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில், ""இந்தியாவில் அடுத்த மாதம் 21 முதல் 23-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில் பங்கேற்க, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜமாலி மறுப்பு தெரிவித்துள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர், இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அவர் கூறியுள்ளார் என்றும், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நடுவர் தீர்ப்பு மற்றும் நீதி அமலாக்கம் தொடர்பான இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கெளதம் பம்பாவாலே, நீதிபதி ஜமாலியை கடந்த ஜூலை மாதம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com