இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பில் தாமதம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பில் தாமதம்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு தாமதமாக அக். 13-இல் வெளியாகும் என்று ஸ்வீடன் அகாதெமி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு தாமதமாக அக். 13-இல் வெளியாகும் என்று ஸ்வீடன் அகாதெமி தெரிவித்துள்ளது.
இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகளைப் பெறுபவர் யார் என்று அறிய உலக அளவில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த நிலையில், இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு தாமதமாகும் என்ற செய்தி கசிந்ததால், பரிசுக் குழுவில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி பரவக் காரணமாயிற்று.
இது குறித்து அகாதெமி உறுப்பினர் பெர் வாஸ்ட்பெர்க் கூறியதாவது: இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்குவது குறித்த ஸ்வீடன் அகாதெமி ஆலோசனைக் கூட்டங்கள் செப்டம்பர் 22-ஆம் தொடங்கி தொடர்ந்து நான்கு வியாழக்கிழமைகள் நடைபெறும். அதன் முடிவில் பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்படும். வழக்கமாக மாதத்தின் கடைசி வியாழக்கிழமைக்கு முந்தைய வியாழன் முதல் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இவ்வாண்டு செப். 22-ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக நான்கு வியாழக்கிழமைகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்ற பின்னர், இறுதி ஆலோசனைக் கூட்டம் அக். 13 நடைபெறும். அதன் முடிவில் விருது பெறுபவர் பெயர் அறிவிக்கப்படும். பரிசுத் தேதி அறிவிப்பில் ஏற்படும் தாமதத்துக்கு இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்றார்.
இந்த ஆண்டுக்கான முதல் அறிவிப்பாக மருத்துவ நோபல் பரிசு பெறுபவர் விவரங்கள் திங்கள்கிழமை (அக். 3) வெளியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com