கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் வலிமையான ராணுவம்: சீன அதிபர் வலியுறுத்தல்

சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கீழ் வலிமையான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் வலிமையான ராணுவம்: சீன அதிபர் வலியுறுத்தல்

சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கீழ் வலிமையான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாசேதுங் மேற்கொண்ட நெடும்பயணத்தின் 80-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஜீஜின்பிங் கூறியதாவது:
வலிமையான தேசத்தை உருவாக்க வலிமையான ராணுவத்தை உருவாக்க வேண்டும். வலிமையான ராணுவத்தின் மூலமாகத்தான் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். சர்வதேச அந்தஸ்துக்குஏற்பவும் தேசப் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீரமும் பண்பும் மிக்க வீரர்களைக் கொண்ட புதிய தலைமுறை ராணுவத்தை உருவாக்க வேண்டும். இரும்பு போன்ற மன உறுதி, கட்டுப்பாடு உள்ளபடையை உருவாக்குவோம்.
மாவோவின் நெடும்பயணத்தின்போது இருந்த செம்படையின் பாரம்பர்யத்தில், இப்போது மக்களின் படையாக புதிய ராணுவம் பயணம் செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைமுழுவதுமாக ஏற்று வலிமையான ராணுவமாகச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் சீன பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பொறுப்பான மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com