மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,400 அகதிகள் மீட்பு

லிபியாவையொட்டிய மத்தியதரைக் கடலில் தத்தளித்த சுமார் 1,400 அகதிகள் வியாழக்கிழமை மீட்கப்பட்டதாக இத்தாலிய கடலோரக் காவல் படை தெரிவித்தது.

லிபியாவையொட்டிய மத்தியதரைக் கடலில் தத்தளித்த சுமார் 1,400 அகதிகள் வியாழக்கிழமை மீட்கப்பட்டதாக இத்தாலிய கடலோரக் காவல் படை தெரிவித்தது.
இத்தாலிய கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 6 ரப்பர் படகுகள், ஒரு சிறிய மரப் படகு ஆகியவற்றில் பயணம் செய்த சுமார் 800 அகதிகள், சர்வதேச மருத்துவஉதவி அமைப்பின் மீட்புப் படகு மூலம் நடுக்கடலில் மீட்கப்பட்டனர்.
நடுக்கடலில் தத்தளித்த மேலும் 432 பேரை மால்டாவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு மீட்டது. எஞ்சிய நபர்கள், ஐரோப்பிய யூனியனின் ஆள் கடத்தல் தடுப்புப் படை உதவியுடன் இத்தாலியகடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் லிபியாவையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த 2,400-க்கும் மேற்பட்ட அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை மட்டுமே மத்தியதரைக் கடலில் இரு ரப்பர் படகுகள், மூன்று சிறிய மீன் பிடிப் படகுகளில் வந்த சுமார் 300 அகதிகள் மீட்கப்பட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்துஇத்தாலியையொட்டிய மத்தியதரைக் கடல் பகுதியில் தத்தளித்த 1 ஒரு லட்சத்து 45 ஆயிரம் அகதிகளை அந்நாட்டின் கடற்படையும் கடலோரக் காவல் படை மீட்டன என்று அந்நாட்டு உள்துறைஅமைச்சகம தெரிவித்தது. ஐ.நா. அளித்த தகவலின்படி, உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியேறி ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகளில், இந்த ஆண்டுமட்டுமே 3,600-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டபோது கடலில் மூழ்கி இறந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com