வெற்றி பெற்றால் தேர்தல் முடிவுகளை ஏற்பேன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் அந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்பேன்; சந்தேகமளிக்கும் விதத்தில் முடிவுகள் அமைந்தால் வழக்கு தொடுப்பேன் என்று
வெற்றி பெற்றால் தேர்தல் முடிவுகளை ஏற்பேன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் அந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்பேன்; சந்தேகமளிக்கும் விதத்தில் முடிவுகள் அமைந்தால் வழக்கு தொடுப்பேன் என்றுகுடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஒஹையோ மாகாணம், டெலவேரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் அவர் தெரிவித்ததாவது: ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தஅமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அந்தத் தேர்தல் முடிவுகளை நான் ஏற்பேன் என்று என்னுடைய ஆதரவாளர்களுக்கும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதியளிக்கிறேன்.

முடிவுகள் தெளிவாக இருந்தால் அதனை ஏற்பேன். கேள்விக்குறியாகும் விதத்தில் முடிவுகள் வெளியானால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றார்.
முன்னதாக, அதிபர் தேர்தலையொட்டி இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்ட நேரடி விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தலின்போது முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்றும்

அவ்வாறு முறைகேடுகள் நடந்தால், முடிவுகளை ஏற்க மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால்முடிவுகளை ஏற்பதாகவும், சந்தேகம் ஏற்படும்படியான முடிவுகள் வெளியானால் வழக்கு தொடுப்பேன் என்றும் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் விளக்கம் அளித்தார்.
"வன்முறையைத் தூண்ட ஹிலாரி திட்டம்': அவர் மேலும் கூறியதாவது: அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியதிலிருந்து தேர்தல் முறைகேடு, மோசடி பற்றிய அறிகுறிகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. நேரடி விவாதத்தின்போதும் இந்த விவகாரத்தை எழுப்பியிருக்கிறேன். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நமது வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறார்கள். அப்படிப்பட்ட சட்ட விரோதக்குடியேற்றக்காரர்கள், அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஹிலாரியின் பிரசாரக் குழுத் தலைவர் ஜான் பொடெஸ்டா கூறி வருகிறார். எனவே நாட்டு மக்கள்

வெகுளித்தனமாக இருந்துவிடாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கூலிப் படைகள் மூலம் ஜனநாயகக் கட்சியினர் நமது பிரசாரக் கூட்டங்களில் குழப்பம், வன்முறையைப் பரப்பி வருகின்றனர்.

இந்த விஷயம் பொதுமக்கள் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.
வெற்றி பெறுவதற்காக ஜனநாயகக் கட்சியினர் எதையும் செய்வார்கள். பல நூற்றாண்டுகளாக அமைதியாக நடைபெற்று வரும் அதிபர் தேர்தலை அவர்களுடைய கிரிமினல் மனப்பாங்கு கவிழ்க்கப்பார்க்கிறது. வன்முறையைத் தூண்டி வெற்றி பெறத் திட்டமிடும் ஹிலாரியைப் போன்ற வேட்பாளர்கள் நாட்டுக்கே ஆபத்தானவர்கள் என்று டிரம்ப் கூறினார்.

அதிகரிக்கும் தேர்தல் செலவு

அதிபர் தேர்தல் நாளான நவ. 8-ஆம் தேதி நெருங்கும்நிலையில், இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அதிக அளவில் தங்கள் நிதியை செலவு செய்து வருகின்றனர் என்று அமெரிக்காவின் தேசிய தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரசாரக் குழுவில் 800 பேர் உள்ளனர். டந்த செப்டம்பர் மாதம் அவர் செலவிட்ட தொகை 55 லட்சம் டாலர் (சுமார் ரூ.36.80 கோடி). பிரசாரத்துக்காக இதுவரை அவர்
செலவிட்ட மொத்த தொகை 8.3 கோடி டாலர் (சுமார் ரூ. 556 கோடி).

டொனால்ட் டிரம்ப் பிரசாரக் குழுவில் 350 பேர்
இடம்பெற்றுள்ளனர். அவர் ஆகஸ்ட் மாதம் வரை மிகக் குறைந்த தொகையே பிரசாரத்துக்கு செலவு செய்து வந்தார். இந்த நிலையில், செப்டம்பரில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக மட்டுமே 2.3 டி

டாலர் (சுமார் ரூ. 154 கோடி) செலவிட்டார். செப்டம்பர் வரை பிரசாரத்துக்காக டிரம்ப் செலவு செய்த மொத்த தொகை 7 கோடி டாலர் (சுமார் ரூ. 469 கோடி).

நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் நியூயார்க் பேராயர் கார்டினல் திமோதி டோலனுடன், டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர். கிறிஸ்தவத் தொண்டு நிறுவனத்தின் சார்பில், முன்னாள் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆல்பிரட் இ.ஸ்மித் நினைவாக, ஏழைச்சிறார்களின் மறுவாழ்வு நிதி திரட்ட, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 3-ஆம் வியாழக்கிழமை இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com