ஸ்மார்ட் போனில் இருந்து அழைப்பு மட்டுமல்ல... விஷ வாயுக்களும் வரும்: ஆய்வில் தகவல்

ஸ்மார்போன் பேட்டரிகள் தீப்பிடிப்பது, வெடிப்பது மட்டும் அல்ல ஸ்மார்ட்போன், டேப்லட் பேட்டரிகளில் இருந்து ஏராளமான விஷ வாயுக்கள் வெளியேறுவதாக விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்மார்ட் போனில் இருந்து அழைப்பு மட்டுமல்ல... விஷ வாயுக்களும் வரும்: ஆய்வில் தகவல்

புது தில்லி: ஸ்மார்போன் பேட்டரிகள் தீப்பிடிப்பது, வெடிப்பது மட்டும் அல்ல ஸ்மார்ட்போன், டேப்லட் பேட்டரிகளில் இருந்து ஏராளமான விஷ வாயுக்கள் வெளியேறுவதாக விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லித்தியம் - ஐயோன் பேட்டரிகளில் இருந்து கார்பன் மோனாக்சைட் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விஷ வாயுக்கள் வெளியேற்றப்படுவதாகவும், இவற்றால் மனிதர்களுக்கு தோல் அரிப்பு, கண் எரிச்சல், மூச்சுக் குழலில் பாதிப்பு போன்றவையும் சுற்றுச் சூழலுக்கு கேடும் ஏற்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி, ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரி 50 சதவீதம் சார்ஜ் செய்யப்படும் போதே அதில் இருந்து விஷ வாயுக்கள் வெளியேற ஆரம்பித்து விடுவதாகவும், 100 சதவீதம் சார்ஜ் செய்த பிறகு அதிக அளவில் விஷ வாயுக்கள் வெளியேறுவதாகவும் கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com