அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு புத்தகம் விநியோகம்!

அரசு பள்ளிகளில் படிக்கும் 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா வாய்ப்பாடு புத்தகம், முதல் முதலாக தமிழக அரசு சார்பில்

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா வாய்ப்பாடு புத்தகம், முதல் முதலாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தக விநியோகத்தை மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..

தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட 14 வகையான கல்வி கற்க தேவையானவற்றை விலை இன்றி தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம் விலை இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப்பாடு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வாய்ப்பாடு புத்தகத்தில் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு, பெருக்கல் அட்டவணை, வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம், உருளை, கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அடிப்படை அளவுகள், கொள்ளளவு, நிறுத்தல் அளவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வருடத்திற்கு எத்தனை நாட்கள், லீப் வருடத்திற்கு எத்தனை நாட்கள், வருடத்திற்கு எத்தனை மாதங்கள், எத்தனை வாரங்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளிட்ட காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் நடுநிலைப்பள்ளியில் வாய்ப்பாடு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டு விடும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com