"ஆட்சிப் பறிப்பு': வெனிசுலா அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத் தீர்மானம்

வெனிசுலாவில் அதிபர் தலைமையிலான அரசு "ஆட்சிப் பறிப்பில்' ஈடுபட்டதாக, எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெனிசுலா அதிபருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியபோது கூச்சல், குழப்பத்தில் ஆழ்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற அவை.
வெனிசுலா அதிபருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியபோது கூச்சல், குழப்பத்தில் ஆழ்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற அவை.

வெனிசுலாவில் அதிபர் தலைமையிலான அரசு "ஆட்சிப் பறிப்பில்' ஈடுபட்டதாக, எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெனிசுலாவில் அதிபர் தலைமையிலான நேரடி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளனர். இடதுசாரியைச் சேர்ந்த அதிபர் நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டனர். அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கும் அதிபருக்கு சாதகமாகத் தீர்ப்பாகியது. அதிபரின் ஆதரவாளர்கள் நிறைந்த உச்ச நீதிமன்றம் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூலியோ போர்ஹேஸ் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை அவசரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாட்டில் அரசியல் சாசன உரிமைகள் மறுக்கப்பட்டு, ஆட்சிப் பறிப்பு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜூலியோ போர்ஹேஸ் கூறியதாவது: நாட்டில் சட்ட மாட்சிமை இல்லை. இங்கு "ஆட்சிப் பறிப்பு' நிகழ்ந்துள்ளது. அதிபரைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சாசனம் முடங்கியுள்ளது என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம். அதிபர் மடுரோவின் அரசு ஆட்சிப் பறிப்பு செய்துள்ளது என்பதை உலக நாடுகள் கவனத்தில் கொண்டு வெனிசுலாவில் மீண்டும் ஜனநாயகம் துளிர்க்க உதவ வேண்டும் என்றார்.
மேலும் அடுத்த கட்டமாக, அதிபரின் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
அதிபருக்கு எதிரான தீர்மானத்தை விவாதிக்கும்போது அதிபர் ஆதரவு உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து அமளி ஏற்பட்டது. எனினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com