கேலக்ஸி நோட்-7 விவகாரம்: சாம்சங் நிறுவனத்தின் மீது 527 பேர் வழக்குத் தொடுக்க முடிவு

கேலக்ஸி நோட்-7 செல்லிடப்பேசி விவகாரத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தென்கொரியாவைச் சேர்ந்த 527 பேர் சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளனர்.
கேலக்ஸி நோட்-7 விவகாரம்: சாம்சங் நிறுவனத்தின் மீது 527 பேர் வழக்குத் தொடுக்க முடிவு

கேலக்ஸி நோட்-7 செல்லிடப்பேசி விவகாரத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தென்கொரியாவைச் சேர்ந்த 527 பேர் சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஹார்வெஸ்ட் சட்ட ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் பீட்டர் யங்-யீல் கோ திங்கள்கிழமை கூறியதாவது:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோனில் பொருத்தப்பட்ட பேட்டரிகள் வெடிப்பதாக எழுந்த புகாரையடுத்து அந்த ரக செல்லிடப்பேசிகளைத் திரும்பப் பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து, அதனை வாங்கிய வாடிக்கையாளர்கள் 527 பேர், அதனைத் திரும்ப அளிப்பதில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளனர். இதனால், பணவிரயம் மட்டுமின்றி நேர விரயமும் ஏற்பட்டது.
மேலும், கேலக்ஸி -7 ஸ்மார்ட்ஃபோனில் உள்ள வாடிக்கையாளர்களின் தரவுகளை மாற்றித் தருவதிலும் பல்வேறு சிக்கல்கள் நேர்ந்துள்ளன. பல முக்கியமான தரவுகளையும் வாடிக்கையாளர்கள் இழக்க நேரிட்டுள்ளது.
இதையடுத்து, ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு பொருளைத் தயாரித்து உளவியல் ரீதியாகத் தங்களை வேதனைப்படுத்தியதற்காக சாம்சங் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அந்த 527 வாடிக்கையாளர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆயத்தமாக உள்ளனர் என்று கோ தெரிவித்தார்.
மாற்று செல்லிடப்பேசி அளிக்கிறது சாம்சங்
நோட்-7 ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் அந்த செல்லிடப்பேசியைக் கடைகளில் திரும்ப அளித்து, அதற்கு மாற்றாக கேலக்ஸி எஸ்-7 அல்லது எஸ்-7 எட்ஜ் ஸ்மார்ட்ஃபோன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சாம்சங் கூறியது.
அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள எஸ்-8 அல்லது நோட்-8 ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களிடமுள்ள எஸ்-7 அல்லது எஸ்-7 எட்ஜ் செல்லிடப்பேசிகளை அப்போது திரும்ப அளித்து 50 சதவீதம் தள்ளுபடி சலுகையைப் பெறலாம் என்று சாம்சங் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com