இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்பை துண்டிப்போம்: பாகிஸ்தான் தொழில் துறையினர்

சுமுகமான உறவு நீடிக்காவிட்டால் இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்பை துண்டிக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தொழில் - வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுமுகமான உறவு நீடிக்காவிட்டால் இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்பை துண்டிக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தொழில் - வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இரு நாட்டு எல்லைகளில் நிலவி வரும் அசாதாரண சூழல், வெளியுறவில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு ஆகியவற்றின் தாக்கத்தால் இத்தகைய முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
உரி தாக்குதல் சம்வபத்தைத் தொடர்ந்து, இந்தியப் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் மூண்டது. இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் "டான்' நாளிதழுக்கு அந்நாட்டுத் தொழில் வர்த்தக சபைக் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரவுஃப் ஆலம் பேட்டியளித்துள்ளார்.
அதில் இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைகள் குறித்து அவர் தெரிவித்திருந்ததாவது:
இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் பாகிஸ்தானுக்கு இல்லை.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வர்த்தகர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் எத்தகைய முடிவை எடுத்தாலும், அதற்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள்.
அதைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, இந்தியாவுடன் நாங்கள் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன என்று அவர் தெரிவித்ததாக அந்த நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com