எல்லையில் அத்துமீறல்: இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பாணை

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத் தூதருக்கு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத் தூதருக்கு அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
இந்தியத் துணைத் தூதருக்கு அழைப்பாணை அனுப்பப்படுவது, இந்த வாரத்தில் இது மூன்றாவது முறையாகும்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சக்ராகர், நிகியால் பகுதிகளில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை (அக். 27) அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியத் துணைத் தூதர் ஜே.பி.சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் சார்க் அமைப்பு நாடுகள் பிரிவின் தலைமை இயக்குநர் முகமது ஃபைசல் வெள்ளிக்கிழமை அழைப்பாணை அனுப்பினார்.
அவரிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் மீறக் கூடாது என்றும், தற்போது இந்திய ராணுவம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல் குறித்து இந்தியா விசாரணை நடத்த வேண்டும் என்றும் முகமது ஃபைசல் வலியுறுத்தினார்.
எல்லைக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்தி, அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com