வேற்று கிரக உயிரினங்கள் உஷார்!

வேற்று கிரகங்களில் உள்ள உயிரினங்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
வேற்று கிரக உயிரினங்கள் உஷார்!

வேற்று கிரகங்களில் உள்ள உயிரினங்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய ஆவணப் படத்தில் அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறியதாவது: இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை என்ற கருத்தில் எனக்குள்ள உறுதி அதிகரித்து வருகிறது. வேற்று கிரகங்களில் இருக்கக் கூடிய உயிரினங்கள் நம்மைத் தொடர்பு கொள்ளும்படி சமிக்ஞைகள் அனுப்பி வருகிறோம். வருங்காலத்தில் ஏதேனும் வேற்று கிரகத்திலிருந்து நமக்கு பதில் வரக் கூடும். ஆனால் மனிதர்களைவிட அவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைந்த உயிரினமாகவும் பலம் பொருந்தியவர்களாகவும் இருக்கக் கூடும். நம்மை ஒரு கிருமியைப் போல அவர்கள் கருத இடமிருக்கிறது. நம்மை எதிரிகளாக வேற்று கிரகத்தவர்கள் எண்ணக் கூடும். நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com