ஹிந்து திருமணச் சட்டம்: பாகிஸ்தான்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஹிந்து திருமணச் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேறியது.

ஹிந்து திருமணச் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேறியது.
இது தொடர்பாக "தி நேஷன்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: மனித உரிமைகள் விவகாரத் துறை அமைச்சர் கம்ரான் மைக்கேல் தாக்கல் செய்த ஹிந்து திருமணச் சட்ட மசோதா நாடாளுமன்ற கீழவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
மசோதா தாக்கல் செய்யப்பட்டு 10 மாதங்கள் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து, நாடாளுமன்ற மேலவையில் இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.
பாகிஸ்தானின் 19 கோடி மக்கள்தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை சுமார் 1.6 சதவீதமாகும். 1947-இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து இங்குள்ள ஹிந்துக்களின் திருமணங்களை சட்டபூர்வமாகப் பதிவு செய்ய வழிமுறை இருக்கவில்லை.
இப்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவில் உள்ள அம்சங்கள்- திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்ச வயது 18-ஆகும். மீறுவோருக்கு 6 மாத சிறையும் ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்படும். திருமணங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட விதிமுறைகள் இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இளம் ஹிந்துப் பெண்களைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்வது, கட்டாய மத மாற்றம் செய்வது போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், அவர்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com