ஹெச்1பி விசா விவகாரம்: அமெரிக்காவிடம் அருண் ஜேட்லி முறையீடு

இந்தியப் பொறியாளர்களின் வேலைவாய்ப்பை கட்டுப்படுத்தும் ஹெச்1பி விசா சட்டம் - மறு ஆய்வு செய்யுமாறு அமெரிக்க அமைச்சரிடம், நிதியமைச்சர்
ஹெச்1பி விசா விவகாரம்: அமெரிக்காவிடம் அருண் ஜேட்லி முறையீடு

இந்தியப் பொறியாளர்களின் வேலைவாய்ப்பை கட்டுப்படுத்தும் ஹெச்1பி விசா சட்டம் - மறு ஆய்வு செய்யுமாறு அமெரிக்க அமைச்சரிடம், நிதியமைச்சர் அருண்ஜேட்லி வலியுறுத்தி உள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்ற வரும் தொழில்நுட்பப் பணியாளர்களின் வேலைவாய்ப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ள ஹெச்1பி  விசா சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி, டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஹெச்1பி விசா விதிமுறைகளை, இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்துவதாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்திலும், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், இந்தியா உள்பட அமெரிக்காவில் அலுவலகங்கள் வைத்துள்ள பல நாடுகளும் சிக்கலை சந்தித்துள்ளன. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தகப் பணிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அரசுமுறைப் பயணமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் வில்பர் ரோஸை சந்தித்து இருநாடுகளுக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தார். குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள ஹெச்1பி விசா சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஜேட்லி வலியுறுத்தினார்.

இந்தச் சட்டத்தின்மூலம், இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்துமுடித்து விட்டு, தொழில்நுட்பத் திறனுடன் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும் ஜேட்லி அச்சம் தெரிவித்தார்.

இந்திய ஐடி, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பெருமளவு வர்த்தகம் அமெரிக்க சந்தையை மையப்படுத்தியே இருப்பதால், அவற்றுக்குச் சலுகை காட்டினால் இருதரப்பு வர்த்தக உறவு மேம்பட வாய்ப்புள்ளதாகவும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் அமெரிக்காவால் 65 ஆயிரம் ஹெச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, அமெரிக்காவில் உயர்படிப்பு முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ஹெச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களில் பெரும்பாலானவற்றை இந்தியத் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் பெறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com