உள்நாட்டில் தயாரான விமானம் தாங்கிக் கப்பல்: அறிமுகப்படுத்தியது சீனா

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
உள்நாட்டில் தயாரான விமானம் தாங்கிக் கப்பல்: அறிமுகப்படுத்தியது சீனா

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
சீனாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான இது, வரும் 2020-ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, உக்ரைனிடமிருந்து வாங்கியுள்ள விமானம் தாங்கிக் கப்பலை சீனா பயன்படுத்தி வரும் நிலையில், இந்தக் கப்பலுடன் சேர்ந்து சீன விமானம் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்கிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தப் புதிய விமானம் தாங்கிக் கப்பலை சீனா உருவாக்கத் தொடங்கியது. அந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டாலிடான் கப்பல்கட்டுத் தளத்தில், இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கான தளம் 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் புதியக் கப்பல் கட்டுமான தளத்திலிருந்து புதன்கிழமை இழுத்து வரப்பட்டு, கடல் பகுதியில் விடப்பட்டது.
இதற்காக நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
50,000 டன் எடை கொண்ட இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, உக்ரைனிடமிருந்து வாங்கப்பட்ட லியாவ்னிங் விமானம் தாங்கிக் கப்பலைவிட இது அதிகத் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்த விமானம் தாங்கிக் கப்பலை கடலில் செலுத்தியதன் மூலம், விமானம் தாங்கிக் கப்பலைத் தயாரிக்கும் தனது திறனை சீனா நிரூபித்துள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.
தெற்கு சீனக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயன்று வரும் சூழலில் இந்த விமானம் தாங்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com