தென் கொரியா சென்றடைந்தது அமெரிக்க வான் பாதுகாப்புத் தளவாடம்

சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் அதி நவீன 'தாட்' வான் பாதுகாப்பு ஏவுணைத் தளவாடம் தென் கொரியாவைச் சென்றடைந்தது.
தென் கொரியாவின் சியோங்ஜு பகுதியில் புதன்கிழமை எடுத்து வரப்படும் 'தாட்' ஏவுகணைகளுக்கு, பாதாகைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் சமாதான ஆதரவாளர்கள்.
தென் கொரியாவின் சியோங்ஜு பகுதியில் புதன்கிழமை எடுத்து வரப்படும் 'தாட்' ஏவுகணைகளுக்கு, பாதாகைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் சமாதான ஆதரவாளர்கள்.

சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் அதி நவீன 'தாட்' வான் பாதுகாப்பு ஏவுணைத் தளவாடம் தென் கொரியாவைச் சென்றடைந்தது.
கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை மற்றும் அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தாட்' வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடம் தென் கொரியாவில் நிலை நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இதற்கு வட கொரியா மட்டுமன்றி, அந்த நாட்டின் ஒரே கூட்டாளியான சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தாக்க வரும் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கவல்ல 'தாட்' ஏவுணைகள் தென் கொரியாவில் நிறுத்தப்படுவது, வட கொரியாவைச் சீண்டுவதாக அமைந்து பிராந்திய அமைதியைக் குலைக்கும் என்று சீனா கூறி வந்தது.
வட கொரியாவின் வர்த்தகக் கூட்டாளி என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி, அந்த நாடு அணு ஆயுதம் தயாரிப்பதை சீனா தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.
இந்தச் சூழலில், 'தாட்' வான் பாதுகாப்புத் தளவாடம், பாதுகாப்புப் படையினர் புடைசூழ, அதற்குரிய வாகனத்தில் தென் கொரியாவின் சியோங்ஜு பகுதியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
எதிர்ப்பு: 'தாட்' ஏவுகணைகளை தங்கள் நாட்டில் நிறுத்தி வைப்பது, வட கொரியாவுடனான போருக்கு வழி வகுக்கும் எனக் கூறி, சமாதான ஆர்வலர்கள் 'தாட்' வாகனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com