பாகிஸ்தான் அரசு இணையதளம் ஊடுருவல்: இந்திய தேசிய கீதம் பதிவேற்றம்

பாகிஸ்தான் அரசின் இணையதளத்தை வியாழக்கிழமை ஊருவிய மர்ம நபர்கள், அதில் இந்திய தேசிய கீதத்தைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இணையதளப் பக்கத்தில்,

பாகிஸ்தான் அரசின் இணையதளத்தை வியாழக்கிழமை ஊருவிய மர்ம நபர்கள், அதில் இந்திய தேசிய கீதத்தைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இணையதளப் பக்கத்தில், சுதந்திர தின வாழ்த்துச் செய்தியையும் மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.
'ல்ஹந்ண்ள்ற்ஹய்.ஞ்ர்ஸ்.ல்ந்' என்ற அந்த இணையதளம் வியாழக்கிழமை மதியம் 3.00 மணியளவில் ஊடுருவப்பட்டது.
அதில், ஆகஸ்ட் 15, சுதந்திர தின வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்துச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், '' மனதில் சுதந்திரம், வார்த்தைகளில் நம்பிக்கை, உணர்வில் கெளரவம்... இவற்றை சாத்தியப்படுத்திய மாபெரும் தலைவர்களை வணங்குவோம்'' என்ற வாசகமும், அதைத் தொடர்ந்து, ''ஜன கன மன..'' பாடலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக, இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com